கடந்த 1990களில் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் பெப்ஸி உமா. வாரந்தோறும் அவர் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற பகுதியில் பார்வையாளர்கள் விரும்பி கேட்கும் பாடல்களை ஒளிபரப்புவார். பல ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர்.
அந்தளவுக்கு பெப்ஸி உமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு பெண்ணாக இருந்தார். அவரது இளமையும் அழகும் கொஞ்சுகிற குரலில் அவரது இனிமையான பேச்சும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் குடும்பம் கணவர் பிள்ளைகள் என அவர் செட்டிலான நிலையில் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே ஒதுங்கி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெப்ஸி உமாவிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பெப்ஸி உமா கூறியதாவது, ரஜினி சார் மட்டுமின்றி சில ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ஷாருக்கானுக்கு நோ சொல்லி இருக்கிறேன். சல்மான்கானுடன் ஹீரோயினாகவும் நடிக்க வாய்ப்பு வந்தது.
நடிப்பு என்றால் ஒரு ஃபேஷன் வேண்டும். நானும் நடிகை ஆகணும். தினமும் நடிக்க போகணும் என்ற எண்ணம் எனக்கு ரத்தத்திலேயே கிடையாது. மேக்கப்பை போட்டுக்கிட்டு டிரஸ் எல்லாம் பண்ணிக்கிட்டு இந்த ஹீரோஸ் கூட எல்லாம் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு நடிக்கிறது எல்லாம் ஜோக் கிடையாது.
நடிப்பு என்று போனால் அதில் ஃபேஷன் இருக்க வேண்டும். சும்மா நானும் நடிக்கிறேன் என்று ஏனோதானோ என்று போனேன் என்று நான் இருக்க கூடாது. அப்புறம் எனக்கு பொறுமையே கிடையாது. எனக்கு கே பாலசந்தர் சார் கே பாரதிராஜா சார் ஆபீஸ்ல இருந்து எல்லாம் கூட வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது.
அதை எல்லாம் வேண்டாம் என்று நான் மறுத்திருக்கிறேன். இப்படி நான் சொல்வதால் இதை விட சிறப்பாக நான் ஏதோ எதிர்பார்த்தேன் என்றெல்லாம் கிடையாது. உண்மையில் எனக்கு நடிப்பதில் கொஞ்சமும் ஆர்வமே இல்லை. அதனால் தான் எல்லா வாய்ப்புகளையும் நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் என்று பெப்ஸி உமா கூறியிருக்கிறார்.





