- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்குவாரா வைகை புயல் நடிகர் வடிவேலு? மதுரையில்...

இந்த முறை திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்குவாரா வைகை புயல் நடிகர் வடிவேலு? மதுரையில் இப்படியும் ஒரு நெருக்கடியா?

- Advertisement -

நடிகர் வடிவேலு காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்தவர். குறிப்பாக 1990 முதல் 2010ம் ஆண்டு வரை அவர் நடிக்காத படங்களே இல்லை என்னும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்களில் காமெடி ரோலில் நடித்தார்.

அதிலும் இம்சை அரசன் 23ம் புலிகேசி தெனாலிராமன் போன்ற அவரது படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. மேலும் சுந்தர் சி இயக்கிய வின்னர் ரெண்டு லண்டன் கிரி போன்ற படங்கள் வடிவேலுக்கு பெரிய திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் கடந்த 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆதரவாளராக திமுக பிரசார மேடைகளில் அதிமுக குறித்து விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக அந்த கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்தும் மிக மோசமான வசைபாடினார்.

ஆனால் இந்த தேர்தல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு சினிமா துறையில் பின்னடைவு ஏற்பட்டது. அதிமுகவை திமுகவுடன் சேர்ந்து எதிர்த்த அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பின்றி 10 ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருந்து விலகும் ஒரு மோசமான சூழல் உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் இப்போது சட்டசபை தேர்தலில் திமுக ஆதரவாளராக வடிவேலு இருந்து வருகிறார். இப்போது திமுக கூட்டணியில் தேமுதிக கட்சியும் அங்கம் வகிக்கிறது. அதனால் 10 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரத்தில் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குனர் சுந்தர் சி போட்டியிடுகிறார். சுந்தர் சி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து களத்தில் நிற்கிறார். மதுரை மண்ணின் மைந்தர் வடிவேலு, தனக்கு சினிமாவில் பெரிய முன்னேற்றத்துக்கு உதவிய சுந்தர் சியை எதிர்த்து திமுக வேட்பாளருக்கு பிரசாரம் செய்வாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்