- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் திரைக்கு வரும் நடிகர் விஜய் படம், அட முன்கூட்டியே வந்திருக்க கூடாதா? ஆதங்கமாக கேள்வி...

விரைவில் திரைக்கு வரும் நடிகர் விஜய் படம், அட முன்கூட்டியே வந்திருக்க கூடாதா? ஆதங்கமாக கேள்வி எழுப்பும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக சட்டசபை தேர்தல் களத்தில் நிற்கிறார். அவர் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை கடல் என திரள்வதால் இந்த முறை தவெக கட்சிதான் ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய்தான் என்று பலரும் கூறி வருகின்றனர். ஜாதக ரீதியாக அது நடக்கும் என்று ஜோதிடர்களும் உறுதியாக கூறுகின்றனர்.

இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த படம் திரைக்கு வரவில்லை. சென்சார் பிரச்னை என்ற பெயரில் அந்த படம் முடக்கப்பட்டு விட்டது. அதில் அரசியல் சார்ந்த காட்சிகளை வசனங்களை விஜய் வைத்த நிலையில், அந்த படத்தை வெளியிடாமல் எதிர்கட்சிகள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்த சிவகாசி படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. விஜய் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.

இதில் ஒர்க்‌ஷாப் மெக்கானிக் ஆக இருக்கும் விஜயை அசின் காதலிப்பார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் விஜய்க்கு அண்ணன் அம்மா தங்கை இருப்பது தெரிய வரும். அப்போது அரசியல்வாதியான அண்ணன் பிரகாஷ் ராஜை ஏமாற்றி, அவரது சவால்களை முறியடித்து விஜய் எப்படி தன் தங்கையை தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதுவும் ஒரு பக்காவான அரசியல் கதை தான். இதில் நயன்தாராவும் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். குறிப்பாக வாடா வாடா வாடா தோழா, தீபாவளி தீபாவளி என்னாத்தே சொல்வேனுங்க கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா போன்ற பாடல்கள் அதிரிபுதிரியாக இருந்து விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.

நடிகர் விஜயுடன் அசின் எம்எஸ் பாஸ்கர் ஸ்ரீராம் பிரகாஷ் ராஜ் சரண்யா பொன்வண்ணன் வெங்கட்பிரபு சிட்டி பாபு தேவ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். கடந்த 2005ம் ஆண்டில் வெளியான இந்த படம் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது. சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளுக்கு மறுநாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. அரசியல் கதைக்களம் கொண்ட இந்த படம் ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆனால் வேற லெவலாக இருந்திருக்கும் என தளபதி ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்