- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்களுக்கு என்ன வேலைன்னே விஜய்க்கு தெரியலே, பெட்டர் லக் டூ நெக்ஸ்ட் டைம் - தவெக...

அவங்களுக்கு என்ன வேலைன்னே விஜய்க்கு தெரியலே, பெட்டர் லக் டூ நெக்ஸ்ட் டைம் – தவெக தலைவர் விஜயை கலாய்த்த இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கன்னியாகுமரியில் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய். தனது ஆட்சியில் செய்யப் போகும் சில முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது தவெக ஆட்சி அமைந்ததும் சிட்டிசன்ஸ் அஸ் பார்ட்னர்ஸ் இன் கவர்னன்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதில் நமது அரசில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். மை வெற்றி தமிழ்நாடு டாட் இன் என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

- Advertisement -

மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை பொதுமக்களும் அதில் முன் வைக்கலாம். கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம். அரசு சேவைகளை பொதுமக்களே மதிப்பிடலாம். நிதி நிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம். மக்கள் அரங்கம் என்ற திட்டத்தின் மூலம் தமிழக வரலாற்றில் முதன்முறையாக குடிமக்கள் ஒரு டிஜிட்டல் தளம் வழியாக நேரடியாக சட்டசபையில் மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.

பத்தாயிரம் சரிபார்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால் அது அரசு அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். ஐந்து லட்சம் கையொப்பங்கள் கொண்ட மனு எனில் அது குறித்து தமிழக சட்டசபையில் கட்டாயம் விவாதம் நடத்தப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் முழு நாள் பொதுமக்கள் மனுக்களுக்கு என தனி நேரமாக ஒதுக்கப்படும் என்று விஜய் பேசினார்.

- Advertisement -

விஜயின் இந்த கருத்துகளுக்கு திரைப்பட இயக்குனர் நடிகர் சேரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் போது ஏதாவது பேசுங்க விஜய் என்று சொன்னால் இப்படி பேசுவார்னு நினைக்கல. பாவம் அவருக்கு எம்எல்ஏவுக்கு என்ன வேலைன்னே தெரியலே. ஒவ்வொரு பிரச்சனைக்கும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டே இருந்தா விடிஞ்சிடும்.

சரி விடுங்க யானை அதன் தலையில் அதுவே… பெட்டர் லக் டு நெக்ஸ்ட் டைம். இப்போ தவெக கன்னுக்குட்டிகள் படை சேர்ந்து வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பிப்பாங்க. நாம்ப நம்ம வேலையை பார்க்கலாமா? நாதக செயல் வீரர்களே வெற்றி நம் கையில் வாங்க. விஜயின் இன்றைய பேச்சு நமக்கு அறுவடையாக வாய்ப்பிருக்கு என்று விஜயை கலாய்த்து இயக்குனர் சேரன் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்