- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காரணங்களுக்காக 2 படங்களை நிராகரித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே - ஆதரவாக பேசிய...

அந்த காரணங்களுக்காக 2 படங்களை நிராகரித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே – ஆதரவாக பேசிய பாஜக எம்பி நடிகை கங்கணா ரனாவத்!

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இப்போது அவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து வரும் ராக்கா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் இந்தி நடிகர் ஷாருக்கானும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் நடிகை தீபிகா படுகோனே இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட் என்ற படத்தில் கமிட் ஆகி பிறகு அந்த படத்தில் இருந்து விலகினார். அதேபோல் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க கமிட்டாகி பிறகு அந்த படத்தில் இருந்து விலகினார்.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை, தனது குழுவுக்கு சிறப்பு வசதிகள் ஆகிய நிபந்தனைகளை நடிகை தீபிகா படுகோனே விதித்ததாகவும் அதற்கு அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சம்மதிக்காததால் அந்த படங்களை விட்டு அவர் விலகியதாகவும் அப்போது கூறப்பட்டது. இதையடுத்து சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்கிற விஷயம் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

இந்நிலையில் தீபிகா படுகோனேவின் கோரிக்கைகளுக்கு நடிகை மற்றும் பாஜக எம்பி கங்கணா ரனாவத் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கங்கணா ரனாவத் கூறியதாவது, இதை இவ்வளவு பெரிய விஷயமாக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தீபிகா படுகோனே வந்திருக்கும் பின்னணியையும் அவர் அடைந்திருக்கும் உயரத்தையும் பார்த்தால் அந்த இடத்தை தன் உழைப்பால் அவர் பெற்றிருக்கிறார் என்பது புரியும்.

- Advertisement -

அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் இப்போது ஒரு பெண் பிள்ளைக்கு தாய். திரை உலகின் முன்னணி நடிகையாகவும் திகழ்கிறார். அவர் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற விரும்பினால் அதற்கான தகுதியை அவர் முழுமையாகப் பெற்றிருக்கிறார். ஒரு நடிகை தாயான பிறகு நீண்ட நேரம் வேலை செய்யச் சொல்வது அவருக்கு கடினமாகி விடும். திரை துறைக்கு புதிதாக வரும்போதும் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும்போதும் உங்களை எளிதில் படத்தில் இருந்து மாற்றிவிட முடியும்.

ஆனால் தீபிகா படுகோனே இப்போது இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள் அவரது நேரத்துக்கு ஏற்ப வேலையை அமைத்துக் கொள்வார்கள் என்று கங்கணா கூறியிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தீபிகா படுகோனே – கங்கணா மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில் இப்போது தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக கங்கணா ரனாவத் பேசியிருப்பது பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்