ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் அருண் சிதம்பரம் ஜான் கொக்கைன் உள்ளிட்டோர் நடித்த படம் பிளாஸ்ட். இன்று இந்த படம் திரையரங்குளில் வெளியாகி உள்ளது.
ஆக்சன் களத்தில் உருவாகியுள்ள பிளாஸ்ட் படம் குறித்த விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். தமிழகத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சுரங்க ஒப்பந்தத்தை வில்லன் எடுக்கிறார். அதற்கு 1000 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கிறார் ஒரு அமைச்சர். அதை வில்லன் தனது ஆள் மூலமாக கொடுக்க பிளான் பண்ணுகிறார்.
அந்த பணம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விஷயத்தில் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் குடும்பம் சிக்கி விடுகிறது. அமைச்சருக்கு பணம் செல்வதில் தடை ஏற்படுகிறது. அந்த குடும்பத்தை வில்லன் குரூப் அழிக்க நினைக்கிறது. உண்மையில் அவர்கள் கராத்தே மாஸ்டர் குடும்பத்தினர். அதன் பின்பு கதையில் என்ன நடக்கிறது என்பதை பக்கா ஆக்சன் பின்னணியில் இயக்குனர் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
அர்ஜூன் குடும்பத்தினரை அப்பாவிகள் என நினைத்து அணி அணியாக வரும் வில்லன்களை அப்பா அர்ஜூன் அம்மா அபிராமி மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் எப்படி ஆக்சனுக்கு மாறி அடிக்கிறார்கள் என்பது தான் பிளாஸ்ட் படத்தின் கதை. வழக்கமாக தனது படங்களில் அர்ஜூன் சண்டை போட்டு வில்லன்களை அழிப்பார். பலரை கொன்று தனது குடும்பத்தை காப்பாற்றுவார்.
ஆனால் பிளாஸ்ட் படத்தில் அவருடன் மனைவி மகளும் என ஒரு குடும்பத்துடன் ஆக்சனில் இறங்கி இருக்கும் கதைக்களம் புதுசு. இதுவரை கவர்ச்சியாக நடித்து வந்த ப்ரீத்தி இந்த படத்தில் ஹோமிலியாக வருகிறார். ஆக்சன் சீன்களில் அட்டகாசம் செய்திருக்கிறார். அப்பாவியாக பாசக்கார அம்மாவாக வரும் அபிராமியும் ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். ஆனால் படம் முழுக்க அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் போர் அடிக்கிறது.
வீட்டில் உள்ள பெண்கள் வீரமாக இருக்க வேண்டும். தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். பிரச்சனை வந்தால் யாரையும் நம்பாமல் அதிரடியில் இறங்கி வம்பு இழுப்பவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பாலியல் சீண்டல் வந்தால் பறந்து பறந்து உதைக்க வேண்டும் என்கிற ஒரு கதைக்களத்தில் இந்த படம் உள்ளது. குடும்பத்துடன் குறிப்பாக வீட்டுப் பெண்கள் பெண் குழந்தைகளுடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.





