- Advertisement -
Homeபொழுதுபோக்குகுளிக்க போன இடத்தில் கிணறுக்குள் ஸ்டோரி டிஸ்கசன் செய்த உதவி இயக்குனர்கள் - அப்போது இயக்குனர்...

குளிக்க போன இடத்தில் கிணறுக்குள் ஸ்டோரி டிஸ்கசன் செய்த உதவி இயக்குனர்கள் – அப்போது இயக்குனர் கே பாக்யராஜ் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக ஆரம்பத்தில் இருந்தவர் கே பாக்யராஜ். பிறகு அவர் இயக்குனராக பிறகு பாண்டியராஜன் பார்த்திபன் லிவிங்ஸ்டன் வி சேகர் ஆர்பி விஸ்வம் இளமுருகு செம்புலி ஜெகன் உள்ளிட்ட பலர் அவரிடம் உதவி இயக்குனராக இருந்து தொழில் கற்றுக் கொண்டவர்கள்தான்.

பின்னாளில் அவர்கள் இயக்குனர்களாக நடிகர்களாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றனர். இதில் இயக்குனர் வி சேகர் குடும்ப கதை இயக்குனராக வெற்றி பெற்றவர். வரவு எட்டணா செலவு பத்தணா விரலுக்கேத்த வீக்கம் ஒண்ணா இருக்க கத்துக்கணும் நான் பெத்த மகனே பொங்கலோ பொங்கல் காலம் மாறிப்போச்சு போன்ற பல ஹிட் படங்களை தந்தவர்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, என்னிடம் உதவி இயக்குனராக அப்போது இருந்த வி சேகர் உள்பட ஏழெட்டு பேரை கூட்டீட்டு பவானி தோட்டத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக போயிருந்தோம். காலையில் எந்திரிச்ச பிறகு நான் தோட்டத்துக்குள் சிறிது தூரம் வாக்கிங் போயிட்டு வருவது வழக்கம்.

அப்படி நான் வாக்கிங் போயிட்டு திரும்பி வரும்போது அங்கிருக்கிற கிணத்துக்குள்ள இவனுங்க எல்லாம் நீச்சலடிச்சு குளிச்சிட்டு இருப்பானுங்க. அப்போ கிணத்துக்குள்ள இருந்து ஏதோ ஸ்டோரி டிஸ்கசன் பண்ற மாதிரி எனக்கு சத்தம் கேட்டது. பரவாயில்லையே, காலையில் 7 8 மணிக்கெல்லாம் இப்படி பொறுப்பா ஸ்டோரி டிஸ்கசன் எல்லாம் பண்றாங்களே அப்படீன்னு நினைச்சுட்டேன்.

- Advertisement -

பக்கத்துல வந்து லேசா கிணத்தை எட்டிப் பார்த்தா, வி சேகர் தான் பேசிட்டு இருக்கான். கதையை பத்திதான் ஆர்வமா பேசிட்டு இருக்கான். ஆனா அவன் கதையை பத்தி பேசிட்டு இருக்கான். கொஞ்ச நேரம் கேட்டுட்டு நல்லா இருக்குதுடா என்று சொன்னேன். அய்யய்யோ சார் சார் என்றான். இல்லே தப்பில்லே. வெட்டியா ஏதோ நாயம் பேசாமல் இப்போ கூட கதையை பத்தி பேசிட்டு இருக்கீங்களே?

அது நல்ல விஷயம்தான். நேரத்தை வீணாக்காம கதையை பத்தி பேசறது தப்பில்லே. ரூமுக்கு வந்து என் கதையை பத்தி பேசுங்க. இங்க கிணத்துக்குள்ள உங்க கதையை பத்தி பேசுங்க என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்றேன். கிடைச்ச நேரத்தை வீணாக்காத அந்த சின்சியாரி்ட்டி தான் டைரக்டர் ஆன போது வி சேகரை பெரிய அளவில் ஜெயிக்க வைத்தது என்று இயக்குனர் கே பாக்யராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்