- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் கூட மோத தயார் இல்லே, ஆனா இந்த முறை சிவகார்த்திகேயன் மோதப் போவது யார்...

தலைவர் கூட மோத தயார் இல்லே, ஆனா இந்த முறை சிவகார்த்திகேயன் மோதப் போவது யார் கூட தெரியுமா? எஸ்கேவுக்கு இதுவும் வம்பு பொங்கல் தானா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தை தொடர்ந்து இப்போது நடித்து வரும் படம் சேயோன். தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தாய்கிழவி படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன், வெற்றிப் பட இயக்குனருடன் இணைந்து சேயோன் படம் உருவாகிறது.

தாய்கிழவி படம் உருவான அதே தேனி மாவட்டம் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேயோன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதல்கட்ட ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளது. ஏனெனில் 2ம் கட்ட படப்பிடிப்பில் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்ய இயக்குனர் கால அவகாசம் கேட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் இப்போது தனது குடும்பத்துடன் வெளிநாடுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதனால் வருகிற ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தான் இந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த படம் முதலில் தீபாவளி ரிலீஸ் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் 2 படம் திரைக்கு வருகிறது. அதனால் தனது தலைவர் படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயன் படம் தனது படம் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் சேயோன் படம் வருகிற 2027ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் பொங்கலுக்கு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் வருகிற பொங்கலுக்கு நடிகர் சூர்யா நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் ஒன்றாக மோதும் சூழல் உருவாகி உள்ளது. ஒருவேளை சில தினங்கள் முன்பு அல்லது பின்னதாக சேயோன் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் நேரத்தில் சிவகா்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி சிவகார்த்திகேயனை தளபதி ரசிகர்கள், கடுமையாக விமர்சித்தனர். தளபதிக்கு எதிராக சிவகார்த்திகேயன் படமா என்று கொந்தளித்தனர். வருகிற பொங்கலுக்கும் சூர்யாவுக்கு போட்டியாக சிவகார்த்திகேயனா என்று சூர்யா ரசிகர்களும் கொந்தளிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்