- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பேசினாலே பிரச்னை தான், பேசலை என்றால் அப்படியும் விமர்சனம் செய்வார்கள் - தர்மன் படம்...

நான் பேசினாலே பிரச்னை தான், பேசலை என்றால் அப்படியும் விமர்சனம் செய்வார்கள் – தர்மன் படம் துவக்க விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து இப்போது டிராகன் பட இயக்குனர் அஸ்வித் மாரிமுத்து இயக்கத்தில் தனது 173 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்ரன் ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் பேசினாலே பிரச்சனைதான். அது எனக்கும் பிரச்சனை. உங்களுக்கும் பிரச்சினை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிட்டார் என அதற்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள்.

ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்தது. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பதும் முட்டாள்தனம். இந்த படத்துக்கு 4வது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதலில் இதை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. அதன் பின்னர் சுந்தர் சி அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியில் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. அது ரொம்பவும் சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம். அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்து விட்டோம். கதையை நான் கேட்கலே. நீங்களே கேட்டு சொல்லுங்க என்று கமல் சொல்லிவிட்டார். படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக இருந்தது.

இந்த கதையெல்லாம் வேண்டாம் கமல். நீங்களே கதையை கேட்டு ஓகே சொல்லுங்க என்றேன். அஸ்வத்துக்கு பெரிய பொறுப்பு இருக்கு. அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் இயக்கிய டிராகன் படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது. கமலுடன் நட்பு குறித்து நான் சொல்லவே தேவையில்லை.

கடந்த 1975களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது கமலால் தான் பண்ணினேன். அதில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியது. கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் நான் செய்த மேனரிசங்களை பாராட்டியவர் கமல். அவர் செய்த உதவியாகட்டும் ஊக்கமாகட்டும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

சற்று முன்