தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழ் சினிமாவுக்கும் இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே பாக்யராஜ். பிறகு அவரே இயக்குனராகி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான அவர் தனது படங்களில் எம்ஜிஆர் குறித்த காட்சிகளை வைத்தார். தன்னை எம்ஜிஆர் ரசிகராக வெளிப்படுத்தினார்.
எம்ஜிஆரின் ஆதரவாளராக அதிமுக தேர்தல் கூட்டங்களில் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டிப் பேசினார். எம்ஜிஆரின் அன்புக்கு பாத்திரமான நிலையில் எம்ஜிஆர் அவரை தனது கலையுலக வாரிசு எனவும் அறிவித்தார். ரஜினி கமல் போன்றவர்களுக்கு நட்சத்திர ஹீரோக்களுக்கு கிடைக்காத அந்த பெருமை நடிகர் கே பாக்யராஜூக்கு கிடைத்தது.
இதுகுறித்து இன்றைய சட்டசபை சபாநாயகர் எம்ஜிஆரிடம் கேள்வி கேட்டுள்ளார். தற்போது தவெக ஆட்சியில் அமைத்துள்ள சட்டசபையில் சபாநாயகராக இருப்பவர் ஜேடிசி பிரபாகர். இவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். எம்ஜிஆரின் அன்புக்கு சொந்தக்காரர்.
எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் உனக்கு தான் என் மகளை திருமணம் செய்து வைத்திருப்பேன். நீதான் எனக்கு மாப்பிள்ளை ஆகியிருப்பார் என்று எம்ஜிஆரே ஒருமுறை ஜேடிசி பிரபாகரிடம் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் அன்பை பெற்றவர் ஜேடிசி பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக சட்டசபை சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் கூறியிருப்பதாவது, எம்ஜிஆர் பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள் இராமாவரம் தோட்டத்துக்கு நான் நேரில் சென்றேன்.
எம்ஜிஆரை நேரில் பார்த்து, பாக்யராஜை ஏன் இப்படி அறிவித்தீர்கள்? என்று கேட்டேன். என்னை காரில் அமர வைத்து இராமாவரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை அழைத்துச் சென்றார். அப்போது நான் ஏன் பாக்யராஜை என்னுடைய கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்பதற்கான காரணங்களை எம்ஜிஆர் என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். பின்பு நான் அவரது அந்த முடிவு சரிதான் என்று எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டேன் என்று ஜேடிசி பிரபாகர் கூறியிருக்கிறார்.





