- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்கும் 52வது படத்தில் அசோக் செல்வன் நடிக்காதது ஏன் தெரியுமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை...

தனுஷ் இயக்கும் 52வது படத்தில் அசோக் செல்வன் நடிக்காதது ஏன் தெரியுமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை – அட அனுபவம் உள்ள தனுஷ் இப்படி பண்ணலாமா?

- Advertisement -

நடிகர் தனுஷ் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல நடிகராக பாராட்டுகளை பெற்றவர். சில படங்களில் பாடி நல்ல பாடகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தொடர்ந்து சில நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து நல்ல தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். இப்போது இயக்குனராகவும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

முதலில் ப பாண்டி என்ற படத்தை இயக்கிய அவர் தொடர்ந்து தனது 50வது படம் ராயன் படத்தை அவரே இயக்கி, நாயகனாக நடித்தார். 2 மாதங்களுக்கு முன் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஆண்டில் வெளியான 6 படங்கள் ரூ. 100 கோடி வசூலை கடந்தன. அதில் ராயன் படமும் ஒன்று.

- Advertisement -

இப்போது தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து தனுஷ் இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம், அடுத்து வெளிவர இருக்கிறது. அடுத்து 4வது படமாக தனுஷ் இயக்கி நடிக்கும் படம்தான் இட்லிக்கடை. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகை நித்யாமேனன் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இந்த படத்தில் இணைகிறார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இட்லி கடை என யதார்த்தமான ஜனரஞ்சகமான ஒரு பெயர் வைத்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் பிறகு அவர் நான் நடிக்கவில்லை என்று அவரே தெரிவித்தார். அசோக் செல்வன் வளரும் இளம் நடிகராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தனுஷ் படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதும், அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது.

தனுஷ், அவரது 52வது படத்தில் நடிக்க அசோக் செல்வனை அழைத்தது உண்மைதான். அவரும் சம்மதித்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்று தனது கேரக்டர் குறித்து தெரிந்துகொண்டுள்ளார். அப்போது தனது கேரக்டர் டம்மி என தெரிய வந்துள்ளது. அழுத்தமான கேரக்டர் இல்லை என தெரிய வந்ததும், இது தனக்கு அவசியமில்லாத கேரக்டர் என அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி இருக்கிறார். ஒரு வளரும் நடிகருக்கு சிறந்த கேரக்டரை தராமல் அனுபவம் மிக்க தனுஷ் இப்படி ஏமாற்றலாமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்