- Advertisement -
Homeபொழுதுபோக்குமலை மேல் பாடல் காட்சி படப்பிடிப்பு, சுற்றிலும் வேடிக்கை பார்க்க திரண்ட ரசிகர் கூட்டம், காஸ்ட்யூம்...

மலை மேல் பாடல் காட்சி படப்பிடிப்பு, சுற்றிலும் வேடிக்கை பார்க்க திரண்ட ரசிகர் கூட்டம், காஸ்ட்யூம் மாற்றுவதற்காக பட்ட அவதி – நடிகை சுகன்யா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இன்று சினிமாவில் முன்னணி நடிகர்கள் எல்லாருமே கேரவன் பயன்படுத்துகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களுக்கு சகல வசதிகளும் கொண்ட கேரவன் வந்து விடுகிறது. ஏசி வசதியுடன் ஓய்வெடுக்கவும் தூங்கவும் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் மேக்கப் செய்யவும் கேரவனை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் கடந்த 1980 90களில் எல்லாம் இந்த கேரவன் வசதி கிடையாது. எங்கு ஷூட்டிங் நடந்தாலும் அங்குள்ள சூழல்களில் தான் நடிகர்கள் நடிகைகள் முழுநாளும் இருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். உடை மாற்ற வேண்டும். எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு படத்திலும் நடிக்க வேண்டும். அதுபோன்ற சிரமங்களில் தான் அன்று நடிகைகள் நடித்து புகழ் பெற்றார்கள்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை சுகன்யா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் அப்போது நடித்த சில படங்களில் பாடல் காட்சிகள் எல்லாம் மலை மேல்தான் ஷூட் பண்ணுவாங்க. கடுமையான வெயிலாக இருக்கும். லைட்டுகள் எல்லாம் அவ்வளவு ஹீட்டாக ஹெவியா இருக்கும். போதாக்குறைக்கு ரிப்ளெக்டர் வெச்சு அதில் இருந்து சூரிய ஒளி ஹெவியா மேல படும்.

அதில் இருந்து சன்லைட் ரிப்ளெக்ட் ஆகி கண்ணே திறக்க முடியாதபடி ஆயிடும். பாதி நேரங்களில் எங்களுக்கு அப்படி ஆயிடும். அவ்வளவு ஹீட்டா இருக்கும். இந்த நேரத்துல ஷூட்டிங் பார்க்க நிறைய பேர் அங்கே வந்துடுவாங்க. சுத்தியும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பாங்க. 100 200 வரைக்கும் இருப்பாங்க.

- Advertisement -

அதனால் அங்கிருந்து இன்னொரு மலைக்கு தாண்டிப் போயி யாரும் அங்க வராமல் நம்ம அசிஸ்டென்ட் அங்க நாலைஞ்சு பேரு இருப்பாங்க.மேக்கப் மேன் காஸ்ட்யூமர் ஹேர் டிரஸ்ஸர் அப்படீன்னு அவங்க கூட இருப்பாங்க. அசிஸ்டென்ட் டச்சப் மேன் எல்லாரும் கூடவே இருப்பாங்க.

அவங்க கொண்டு வர்ற பெரிய துணிகள் பெட்ஷீட் மாதிரி அங்க மரங்கள் இருந்தால் சுத்தியும் 4 பக்கமும் கட்டி மறைவான இடத்துல டிரஸ் மாத்திப்போம். இல்லேன்னா ஷூட்டிங் வேனுக்குள்ள ஸ்கிரீன் மாதிரி கட்டி அங்க டிரஸ் மாத்திப்போம். கடந்த 1980 90களில் இருந்த எல்லா நடிகைகளுமே இப்படி இருந்திருப்போம் என்று நடிகை சுகன்யா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்