- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா, தமிழ் திரைப்பட துறை காட்டும் ஆர்வம் - இப்ப மட்டும்...

முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா, தமிழ் திரைப்பட துறை காட்டும் ஆர்வம் – இப்ப மட்டும் ஓடோடி வர்றீங்களே என்று கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த போது பெரும்பாலான நடிகர்கள் நடிகைகள் அவருக்கு வாழ்த்துகள் கூட சொல்ல முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அவரது படத்தை இயக்கிய அட்லி லோகேஷ் கனகராஜ் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே வாழ்த்துகளை கூறினர்.

அதே போல் தாடி பாலாஜி ஸ்ரீமன் போன்ற சின்ன நடிகர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக பேசினர். ஆனால் வேறு யாருமே விஜய்க்கு ஆதரவாக நிற்கவில்லை. குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது தவெக தலைவராக விஜய் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் தமிழ் சினிமாத்துறை மௌனம் தான் சாதித்தது. ஜனநாயகன் படம் ரிலீஸ் தடைபட்ட போதும் யாரும் வாய்திறக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவரை பல நடிகர்கள் நடிகைகள் கிண்டலாக பேசி கேலி செய்தனர். என்னிடம் பேசும்போது கூட சிலர் அப்படி அவரை நக்கலாக பேசுவதை நான் காதுபட கேட்டு இருக்கிறேன்.

அது மட்டும் இன்றி அப்போதைய திமுக ஆட்சியில் விஜய்க்கு ஆதரவாக பேசினால் எங்கே தங்களது சினிமா வாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் விஜயை துச்சமாக நினைத்து அலட்சியப்படுத்தினர். எப்படியும் திமுக அல்லது அதிமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்றும் கருதினர்.

- Advertisement -

ஆனால் இப்போது அவர் தமிழக முதல்வர் ஆன பிறகு தினமும் திரைப்படத்துறை சார்ந்த பலரும் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். பொன்னாடை அணிவிக்கின்றனர். புத்தகங்களை பரிசளிக்கின்றனர். ஆனால் விஜய் அரசியல் களத்தில் இருந்தபோது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தபோது யாருமே அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. அவர் பக்கமாக நின்று யாருமே பேசவில்லை. ஆனால் இப்போது முதல்வரான பிறகு அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் நடிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே கடந்த காலங்களில் இப்படி முதல்வர்களுக்கு இதே போல் தமிழ் சினிமாத்துறை சார்பில் பாராட்டு விழாக்கள் நடந்திருக்கின்றன. அப்போது பல பிரச்சினைகளும் உருவாகி இருக்கின்றன. எனவே அதையெல்லாம் கவனத்தில் கொண்டு நடிகர் விஜய் இந்த பாராட்டு விழாவை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே தோன்றுகிறது. அதுதான் அவரது சரியான முடிவாகவும் இருக்கும் என்று மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்