- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்ன கலைவாணராக தமிழ் சினிமாவில் வாழ்ந்து மறைந்த நடிகர் விவேக்; அவரது குடும்ப வாழ்க்கையில் இப்படி...

சின்ன கலைவாணராக தமிழ் சினிமாவில் வாழ்ந்து மறைந்த நடிகர் விவேக்; அவரது குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு ரகசியமா? – இது பல பேருக்கு தெரியவே இல்லையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை போலவே காமெடி நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அபரிதமான வரவேற்பும் ஆதரவும் காலம் காலமாக இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் கே ஏ தங்கவேலு தேங்காய் சீனிவாசன் நாகேஷ் சுருளிராஜன் சந்திரபாபு போன்றோர் திரையில் வந்தால்தான் அந்த படமே முழுமையடையும்.

எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் நாகேஷ் சந்திரபாபு தேங்காய் சீனிவாசன் நடித்தனர். அதே நேரத்தில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் சந்திரபாபு என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் சிவாஜி தனது படங்களில் நாகேஷை காமெடிக்கு பயன்படுத்துங்கள் என்று இயக்குனர் தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்வார்களாம்.

- Advertisement -

ஏனெனில் நாகேஷ் நடிப்பது தங்களது படத்துக்கு பலம் என்பது மட்டுமின்றி படப்பிடிப்பு தளங்களில், ஜாலியாக பொழுதை கழிக்கவும் நாகேஷ் போன்றவர்களால் நடிகர்களுக்கு பிரஷர் குறையும். அந்த வழியில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். காமெடியுடன் கருத்தையும் சொன்ன சிறந்த நடிகர்.

கடந்த கொரொனா காலகட்டத்தில் திடீரென உடல்நலக்குறைவால் விவேக் காலமானார். 59 வயதான நிலையில் அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக இருந்தது. கோவித் தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் அவர் திடீரென உயிரிழந்ததால், அவருக்கு அந்த மருந்து சேரவில்லை. அதுதான் அவரது திடீர் மறைவுக்கு காரணம் என்ற சர்ச்சையும் அப்போது ஏற்பட்டது.

- Advertisement -

நடிகர் விவேக் மகன் பிரசன்னா, பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த நிலையில் மகனின் இழப்பால் விவேக் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். எனினும் சினிமாவில் தொடர்ந்து நடித்து தன் மனக்காயங்களை மறந்து, ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஆனால் அவரது மனைவி அருட்செல்வி சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஆச்சரியமான தகவலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அருட்செல்வி கூறியதாவது, எங்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். முதல் மகள் அம்ரிதா நந்தினி 2வது மகள் தேஜஸ்வினி 3வதாக பிறந்த மகன் பிரசன்னா தவறிவிட்டார். அதற்கு அப்புறம் 2017ம் ஆண்டு எங்களுக்கு இரட்டை மகள்கள் பிறந்தனர். பிரசாந்தினி பிரார்த்தனா. இப்போது அவர்கள் ரெண்டு பேரும் ஸ்கூலில் 1ம் வகுப்பு படிக்கின்றனர் என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். விவேக் இரட்டை பெண் குழந்தைகள் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்