- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து தனது படங்களுக்கு அந்த மியூசிக் டைரக்டரை கமிட் செய்யும் நடிகர் தனுஷ் - ஈகோ...

தொடர்ந்து தனது படங்களுக்கு அந்த மியூசிக் டைரக்டரை கமிட் செய்யும் நடிகர் தனுஷ் – ஈகோ தான் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடைசியாக அவரது நடிப்பில் கர படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. இப்போது நடிகர் தனுஷ் ஓம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் முருகன் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்தார். அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானது நடிகர் தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் தான். இந்த படத்தை தனுஷின் அன்றைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்தார்.

- Advertisement -

இந்த படத்தில் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்ததே நடிகர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஒரு நேர்காணலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இன்று இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் ஏராளமான தனுஷ் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார்.

அதன்பிறகு ஜீவி பிரகாஷ் குமார் தனுஷ் படங்களுக்கு இசையமைத்தார். அந்த நேரத்தில் ஜீவி பிரகாஷ் குமாருக்கும் தனுஷூக்கும் இடையே கருத்து வேறுபாடு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் மீண்டும் அனிருத் தனுஷ் படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் இப்போது அனிருத் மிகப்பெரிய உச்சத்துக்கு மாறிய நிலையில் மீண்டும் கசப்பை மறந்து ஜீவி பிரகாஷ் குமாருடன் பல படங்களில் இணைந்தா்.

- Advertisement -

ஆனால் சமீப காலமாக வளரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனுஷ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து தனது படங்களுக்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் தனுஷ் பிடிவாதமாக இருக்கிறார். இப்போது உருவாகி வரும் ஓம் படமும் அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தமிழ் முருகன் படத்திற்கும் அதேபோல் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது.

இது எல்லாமே நடிகர் தனுஷின் பலத்த சிபாரிசின் காரணமாகவே அவர் கமிட் செய்யப்பட்டதாக தொிகிறது. தனுஷ் தனது படங்களுக்கு ஈகோ காரணமாக அனிருத்திடம் சென்று அழைப்பதில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அனிருத், தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருக்கமான உறவினர். அதனால் நடிகர் தனுஷ் தனது படங்களுக்கு அனிருத்தை தவிர்த்து விட்டு சாய் அபயங்கரை கமிட் செய்கிறார். மேலும் ஜீவி பிரகாஷ் உடன் 8 படங்களில் பணிபுரிந்த நிலையில் அதுவே போதும் என்று தனுஷ் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்