தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரசிகர்களால் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வயதான ஹீரோக்களுக்கு இளம் வயதில் உள்ள பெண்கள் ஜோடியாக கதாநாயகியாக நடிப்பது தான். இது அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை தொடர்கிறது.
குறிப்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு லதா மஞ்சுளா போன்ற இளம் வயது கதாநாயகிகள் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அதேபோல் சிவாஜி கணேசனுக்கு அம்பிகா ராதா ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதே வரிசையில் இப்போது நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இளம் வயது கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர்.
அதுவும் 70 வயது கடந்துவிட்ட நிலையிலும் இந்த ஹீரோக்களுக்கு இளம் கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பது ரசிகருக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. இதில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் மிக சகஜமான ஒரு விஷயமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த வரிசையில் நடிகர் அஜீத்குமார் கொஞ்சம் மாறுபட்டு நிற்கிறார்.
அவர் இப்போது 50 வயதுகளை கடந்துவிட்ட நிலையில் வெள்ளை தாடி மீசையுடன் காணப்படுகிறார். அதனால் நான் இளம் வயது கதாநாயகிகளுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். என் வயதுக்குரிய தோற்றத்தில் சற்று முதிர்ச்சியான நடிகைகளுடன் மட்டுமே எனக்கு ஜோடியாக நடிப்பேன் என்று ஏற்கனவே ஒருமுறை கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் திரிஷா நயன்தாரா போன்ற 40 வயது கடந்த ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக தேர்ந்தெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் இந்த படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோஹர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அவர் இளம் வயது அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இருக்கும் இளம் வயது நடிகைகளில் கயாடு லோஹர் முன்வரிசை இளமை நாயகியாக இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் அஜீத்குமாருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா, அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாரா என்பதும் இன்னும் சந்தேகத்தில் உள்ளது.





