- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பிரபல இளம் நடிகர் - இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த இறைவனுக்கு நன்றி...

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பிரபல இளம் நடிகர் – இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்த இளம்தம்பதி!

- Advertisement -

என்னதான் பெயர் புகழ் வசதி என செழிப்பாக வாழ்ந்தாலும் ஒரு ஆணுக்கும் பெண்ணும் திருமணமும் தொடர்ந்து குடும்ப வாழ்க்கை தரும் சந்தோஷமும் நிகரில்லாதது. அதுவும் குழந்தைக்கு தாயாக தந்தையாக அவர்கள் மாறுகிற அந்த தருணம் வாழ்க்கையின் பொக்கிஷமான நேரமாக இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் 45 வயதான தவமாய் தவமிருந்து பட நடிகை பத்மப்பிரியா தனது குழந்தைக்கு 1 வயது ஆகி பிறந்த நாள் கொண்டாடிய தகவலை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஆனால் அது ஆணா பெண்ணா என்பது குறித்தும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் குழந்தை பிறந்து ஒரு ஆண்டு கழிந்த நிலையில் இந்த தகவலை அவர் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கவின். அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் போட்டியாளராக ஒருமுறை கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் அதிக அளவில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிகர் கவின் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

லிப்ட் டாடா பிளடி பெக்கர் கிஸ் மாஸ்க் உள்ளிட்ட படங்களில் கவின் இதுவரை நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக இப்போது அவர் வலம் வருகிறார். இப்போது நடிகை நயன்தாராவுடன் ஹாய் என்ற படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

நடிகர் கவிஞனுக்கும் தனியார் பள்ளியில் பணியாற்றிய மோனிகா என்பவருக்கும் கடந்த 2023ம் தேதி ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணமாகும். அவர் தனது நீண்ட கால தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று கவின் – மோனிகா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக நடிகர் கவின் அறிவித்திருக்கிறார். அவர் தனது பதிவில், எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளனர் என்று தனது வலைதள பக்கத்தில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்