முன்பெல்லாம் சினிமா நடிகர்கள் தங்களது பொதுவாழ்வில் நல்லவர்களாக தீய பழக்கங்கள் இல்லாதவர்களாக காட்டிக் கொள்வார்கள். குறிப்பாக சிகரெட் மதுப்பழக்கம் இல்லாதவர்களாக வெளியே தெரிந்தாலும் தனிமையில் வீட்டில் அதை அவர்கள் செய்வார்கள். இது தனிப்பட்ட விஷயம் என்றாலும் இமேஜ் காரணமாக இதை சிலர் மறைப்பதுண்டு. ஆனால் நடிகைகள் கூட இப்போது புகைப்பழக்கம் மதுப்பழக்கம் இருப்பதை வெளிப்படையாக கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை போட்டியாளராக கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து நோட்டா பெஸ்ட்டி ஜாலியோ ஜிம்கானா டிடி நெக்ஸ்ட் லெவல் உள்ளிட்ட பல படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்.
இவர் தனது வீட்டில் மதுபானங்கள் அருந்தக்கூடிய மதுபானக்கூடம் அதாவது ஃபார் வைத்திருப்பதாக வௌிப்படையாக கூறியிருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எந்த ஒரு பார்ட்டிக்கும் செல்வதில்லை.
அதனால் வழக்கம் போல எங்கள் வீட்டிலேயே பார்ட்டி நடக்கும். வீட்டிலேயே ஃபார் இருக்கும். ஆனால் நான் குடிக்க மாட்டேன். எனக்கு சில இயக்குனர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதை சொல்லும் போது வேறு மாதிரி இருக்கும். எனக்கு முக்கியமான கேரக்டர் என்று சொல்லுவார்கள்.
ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற பிறகு அவர்கள் சொன்ன கதைக்கும் நான் நடிக்கும் கதைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் படத்தில் ஒப்புக்கொண்டதற்காக வேறு வழியில்லாமல் அந்த படங்களில் நடித்துவிட்டு வருவேன். இதனால் நண்பர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற அனுபவத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் இப்போது சிங்கிளாக தான் உள்ளேன். எனது கடைசி காதல் தோல்வியில் முடிந்தது. அது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அந்த காதல் தோல்விக்கு பிறகு நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. இப்போது என்னை நானே காதலித்து கொண்டு சந்தோசமாக வாழ்கிறேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





