- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்திய அரசின் யுவ புரோஸ்கர் விருது - இந்திய ஜனாதிபதி கைகளால் விருது பெற்ற நடிகர்...

மத்திய அரசின் யுவ புரோஸ்கர் விருது – இந்திய ஜனாதிபதி கைகளால் விருது பெற்ற நடிகர் வாகை சந்திரசேகர்!

- Advertisement -

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்திய ஜனாதிபதி பங்கேற்ற 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கான சங்கீத புரோஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று 115 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிகர் வாகை சந்திரசேகர் சிறந்த குணசித்திர நடிகராக உள்ளார். மேலும் அவர் திமுகவிலும் இருந்து வருகிறார். சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த வாகை சந்திரசேகர் ஏற்கனவே சிறந்த துணை நடிகர் தேசிய விருதை பெற்றவர். திமுக சார்பில் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாகவும் வாகை சந்திரசேகர் பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வரும் வாகை சந்திரசேகர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி யுவ புரோஸ்கர் தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு இன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி விருது இந்தியாவின் இசை நடனம் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாகும்.

இசை நடனம் நாடகம் பாரம்பரியம் நாட்டுப்புற கலைகள் மற்றும் பொம்மலாட்டம் கலைகளுக்காக ஒட்டுமொத்த பங்களிப்பு மற்றும் ஆராய்ச்சி என 5 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இசை நாடகம் நடனம் பாரம்பரிய கலைகளில் பங்களிப்புக்கு வழங்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் 1980களில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சந்திரசேகரின் கலைத்துறை சேவையை பாராட்டி கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

- Advertisement -

கடந்த 2002ம் ஆண்டு வெளியான நண்பா நண்பா படத்துக்காக சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் பெற்றார். இப்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் வாகை சந்திரசேகர் உள்ளார். தமிழ் திரை உலகின் மூத்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமியின் புரோஸ்கர் விருதை டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது கரங்களால் விருது வழங்கினார்.

நாடகம் மற்றும் கலைத்துறைக்கு நடிகர் வாகை சந்திரசேகர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பை பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடக கலைஞர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் விருது பெற்ற உடனேயே திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்