சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த மகுடம் என்ற படத்தை முதன்முறையாக டைரக்ட் செய்து அதில் ஹீரோவாக நடித்திருக்கிறார் நடிகர் விஷால். இந்த படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும் படத்தில் துஷாரா விஜயன் அஞ்சலி ஜான்விஜய் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மகுடம் படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, படத்தில் இரண்டு விஷால் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரம். அப்பா பெரிய டான் ஆக இருக்கிறார். மகன் அப்பாவை விட்டு விலகி இருக்கிறார். அதற்கு முக்கியமான காரணம் அப்பாவின் ரவுடித்தனம் தான் என்று நினைக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவை பழி வாங்குபவர்கள் மகனை துரத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் அவர்களை எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த வருடத்தில் வந்த படங்களில் நான் பார்த்த படங்களில் காட்டு மொக்கை படம் என்றால் அது இதைத்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முதலில் ஒரு நாட் உருவாக்கும். அதை வைத்து கதை எழுதி திரைக்கதை அமைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அந்த ஒரு நாட் மட்டுமே வைத்து மொத்த படத்தையும் எடுத்து விட்டார்கள்.
இந்த படத்துக்கு கதையும் இல்லை திரைக்கதையும் இல்லை. படம் 3 மணி நேரம் ஓடுகிறது. ஆனால் கதை நகரவே இல்லை. எந்த ஒரு இடத்திலும் வில்லன் வில்லனாக இருக்கும்போதே அவனுக்கென்று எந்த விதமான கொள்கைகளும் இருக்காது. ஆனால் கதாநாயகன் வில்லனாக இருக்கும்போது அதாவது ரவுடியாக இருக்கும் போது பெண்களை காப்பாற்றுவது விவசாயத்தை காப்பாற்றுவது என்பது போன்ற கொள்கைகள் இருக்கும்.
அந்த வகையில் இந்த படத்தில் கதாநாயகன் சீனாவில் இருந்துவரும் டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸ்சை தடுக்கிறான். படத்தில் இரண்டு ஹீரோ என்பதால் இரண்டு ஹீரோயினையும் போட்டு விட்டார்கள். அவர்கள் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளை எல்லாம் பார்க்க முடியவில்லை. அதுவும் விஷாலும் அஞ்சலியும் செய்யும் ரொமாண்ட காட்சிகளை எல்லாம் பார்க்கவே முடியவில்லை. எந்த ஒரு மொக்கை படத்திலும் 2 காட்சிகளாவது ஏதோ ஒரு சிலருக்கு பிடிக்கும். ஆனால் இந்த படம் பார்த்த மொத்த பேரையும் கதற விட்டுவிட்டது.
இத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ள கதாநாயகன் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்தப் படத்தில் ஏதாவது ஒரு பிளஸ் இருக்கும். ஆனால் இந்த படத்தைப் பார்த்தால் இயக்குனர்கள் எல்லாம் கதாநாயகர்கள் ஆகி வருகிறார்கள் அல்லவா? இவர்கள் கதாநாயகன் ஆவதால் கதாநாயகர்கள் பிழைப்பு கெடுகிறது அல்லவா? அதனால் கதாநாயகன் விஷால் இயக்குனராகி இயக்குனர்களின் பிழைப்பை கெடுப்போம் என்று எடுத்தது போல இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் என்று தனது விமர்சனத்தில் ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.





