- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது ஏமாற்று வேலையா? நம்பிக்கை துரோகமா? கண்துடைப்பா? - இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பில் நடந்த...

இது ஏமாற்று வேலையா? நம்பிக்கை துரோகமா? கண்துடைப்பா? – இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பில் நடந்த மோசடி – தில்லாலங்கடி தவெக அரசை விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதுகுறித்து இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் கேஸ் சிலிண்டர் பயனாளிகள் பணம் கொடுத்து வாங்கிய பிறகு அதற்கான தொகை மக்களின் வங்கி கணக்கில் வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என அறிவித்து அதை 3 ஆக குறைத்துவிட்டு அதையும் பணம் கொடுத்து வாங்கிய பிறகு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்திருப்பது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒருவரது பதிவை மீள்பதிவு செய்து, இது ஏமாற்று வேலையா? நம்பிக்கை துரோகமா? கண் துடைப்பா? என்று தலைப்பில் குறிப்பிட்டு அந்த பதிவு செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ஆறு சிலிண்டர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் என்று தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதி கொடுத்துவிட்டு வெற்றி பெற்றதும் இப்போது 2.5 லட்சத்தில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்.

அதுவும் 3 சிலிண்டர்கள் என அறிவிப்பு. மேலும் சிலிண்டராக இல்லாமல் பணமாக வங்கியில் வரவு வைக்கப்படும். அதாவது மாதம் 20, 800 ரூபாய் வருமானம் வரும் குடும்பத்திற்கு மட்டும். தமிழ்நாட்டில் ஒரு நாள் சித்தாள் கூலியே 700 ரூபாய். சென்னை துப்புரவு ஒப்பந்த தொழிலாளர் ஒரு நாள் கூலி 769. மாதம் முழுவதும் வேலைக்கு வந்தால் வரும் வருமானத்தை விட குறைந்த குறைவாக வருமானம் இருக்க வேண்டும்.

- Advertisement -

அதுவும் ஒட்டுமொத்த குடும்ப வருமானமாக இருக்க வேண்டும். பல சலுகைகள் மூலமாகவும் திட்டங்கள் மூலமாகவும் தமிழ்நாட்டில் சராசரி வருமானம் 4.08 லட்சமாக உயர்த்தியுள்ளோம். அப்படி இருக்கையில் 20 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் வரும் குடும்பத்தைச் தேடிப்பிடித்து 3 சிலிண்டர் வாங்கியதும் அவர்கள் வங்கி அக்கவுண்டில் அதற்கான பணத்தை செலுத்தும் தவெக அரசு என ஒரு ஏமாற்று அறிவிப்பை வாசிக்க கூச்சமாகவே இல்லையா? என்று அந்த பதிவில் உள்ளது.

இதை சுட்டிக்காட்டி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவை செய்து தவெக அரசை கடுமையான விமர்சித்திருக்கிறார். பாரம்பரியம் மிக்க திமுக அதிமுக கட்சிகளை விடவும் தவெக அரசு தமிழக மக்களை நூதனமாக ஏமாற்றுவதில் முன்னிலை வகிக்கிறது. கேஸ் சிலிண்டரை பணம் கொடுத்து வாங்கிய பிறகு அவர்கள் வங்கி கணக்குக்கு பணம் வருமா, வராதா என்பது யாருக்கு தெரியும்? அப்படியே வராமல் போனாலும் யாரை கேட்க முடியும்? இதுதான் சரியான தில்லாலங்கடி வேலை என்று இப்போதே மக்கள் பேசத் துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்