- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 365 நாட்கள், அதாவது தொடர்ந்து ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய தமிழ்...

தமிழ் சினிமாவில் 365 நாட்கள், அதாவது தொடர்ந்து ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?

- Advertisement -

இப்போது புதியதாக ரிலீஸ் ஆகும் படங்கள் தொடர்ந்து ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடிவிட்டாலே அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனால் 100 நாட்கள் 125 நாட்கள் 175 நாட்கள் 200 நாட்கள் என ஓடி சாதனை படைக்கும். அந்த படங்கள் வெள்ளிவிழா படங்கள் என்று கொண்டாடுவார்கள்.

ஆனால் இன்றைய சூழலில் ஒரு புதிய படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 25 நாட்களை கடந்து ஓடுவதே பெரிய சாதனையாக உள்ளது. அதே நேரத்தில் மல்டி பிளக்ஸ் திரைகள் பெருகிய நிலையில் 10 நாட்கள் ஒரு படம் ஓடினாலே அது காட்சிகளின் எண்ணிக்கை பலமடங்காகி விடுகிறது. வசூலும் கணிசமாக குவித்து விடுகிறது.

- Advertisement -

அந்த வரிசையில் கடந்த கால தமிழ் சினிமாவில் ஓராண்டு காலம் அதாவது 365 நாட்கள் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிய சில திரைப்படங்களும் இருக்கின்றன. இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தாலும் அப்படி ஒரு தரமான சம்பவம் பல வெற்றிப் படங்களில் நடந்திருக்கிறது. ஒரு படம் ஒரே தியேட்டரில் 365 நாட்கள் தினமும் 3 அல்லது 4 காட்சிகள் திரையிட்டு வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல.

அந்த வகையில் 365 நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். கடந்த 2005ம் ஆண்டில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் சென்னை சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த படம் 2.5 ஆண்டுகள் அந்த தியேட்டரில் ஓடியது.

- Advertisement -

கடந்த 1944ம் ஆண்டில் தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான வெளியான ஹரிதாஸ் என்ற படம் 760 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1995ம் ஆண்டில் வெளியான ரஜினி நடித்த பாட்ஷா படம் 365 நாட்கள் ஓடியது. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1994ம் ஆண்டில் வெளியான கருத்தம்மா படமும் 365 நாட்கள் திரையில் ஓடிய வெற்றிப் படமாகும். கடந்த 2007ம் ஆண்டில் நடிகர் கார்த்தி அறிமுக ஹீரோவாக நடித்த பருத்தி வீரன் படமும் ஓராண்டு காலம் ஓடிய படமாகும்.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக படம் 1996ல் வெளியாகி ஓராண்டு காலம் ஓடிய ஹிட் படமாகும். இதே ஆண்டில் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த காதல் கோட்டை படமும் வெளியாகி 365 நாட்கள் ஓடியது. இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த 1982ம் ஆண்டில் நடிகர் மோகன் பூர்ணிமா நடித்த பயணங்கள் முடிவதில்லை படமும் 365 நாட்கள் தொடர்ந்து ஓடிய வெள்ளி விழா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்