இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மிஷ்கின். பிறகு சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து அவர் இயக்கிய முகமூடி படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தில் ஹீரோவாக ஜீவாவும் வில்லனாக நரேனும் நடித்திருந்தனர். இந்த படத்தில் தான் தமிழில் முதன்முறையாக நடிகை பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதன்பிறகு மிஷ்கின் இயக்கிய படங்கள் பெரிய கவனமும் வரவேற்பும் பெற்றன.
குறிப்பாக துப்பறிவாளன் அஞ்சாதே சைக்கோ பிசாசு போன்ற படங்கள் மூலம் நட்சத்திர இயக்குனராக மிஷ்கின் மாறினார். இதற்கிடையே சவரக்கத்தி மாவீரன் லியோ வணங்கான் டிராகன் போன்ற படங்களிலும் அவர் நடித்து வரவேற்பை பெற்றார். இப்போது நடிகர் இயக்குனர் என 2 விதமாகவும் சினிமாவில் மிஷ்கின் பயணித்து வருகிறார்.
லியோ படத்தில் நடித்த போது தனது ஒரு நாள் சம்பளம் ரூ. 10 லட்சம் என நிர்ணயித்து வாங்கியவர் மிஷ்கின். பிறகு பிரபல நடிகராக மாறிய பிறகு இதை தினமும் ரூ. 15 லட்சம் என உயர்த்தி விட்டார். தினமும் ரூ. 15 லட்சம் என்றால் 10 நாட்கள் கால்ஷீட் என்றால் கூட ரூ. 1.5 கோடி சம்பளம் என்ற நிலையில் பல தயாரிப்பாளர்கள் மிஷ்கினை தங்களது படத்தில் கமிட் செய்ய தயங்குகின்றனர்.
இதனால் நடிகர் மிஷ்கின் நடிக்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மிஷ்கின் இயக்கிய டிரெயின் படமும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றம் தருகிறது. நேற்று ஆகஸ்ட் 24 ரிலீஸ் என சொல்லப்பட்ட டிரெயின் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.
அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த படமும் போன ஜூலை 24 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படமும் வெளியாகவில்லை. அதே போல் நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஐயம் கேம் என்ற படமும் இந்த மாதம் வெளியாக இருந்த நிலையில் அதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இப்படி தொடரும் ஏமாற்றங்களால் நடிகராக இயக்குனராக மிஷ்கின் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.





