- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம் - சர்ச்சைக்கு பேர் போன இவரா...

நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம் – சர்ச்சைக்கு பேர் போன இவரா கதாநாயகி? – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இந்த படத்துக்கு சிட்டி ஆஃப் கோல்டு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தங்கம் விற்பனையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாக அதிக கவனமும் வரவேற்பும் பெற்றது. சிட்டி ஆஃப் கோல்டு படத்தின் நாயகியாக அறிமுகமாக இருப்பவர் இன்ஸ்டா மூலம் பிரபலமான அமலா சாஜி என்பவர். இவருக்கு இன்ஸ்டாவில் 4.2 மில்லியன் பாலோயர்ஸ் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் இவர் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் அவர் வெளியிடும் பதிவிடும் வீடியோக்கள் பதிவுகளால் பலத்த சர்ச்சை மற்றும் விமர்சனங்களுக்குள் அவர் உள்ளாகி வருபவர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. பெரிய அளவில் அவர் ஏற்படுத்தும் சர்ச்சைகள் இணையத்தில் பேசு பொருளாகி விவாதம் எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு பிரபலத்தை இந்த படத்தில் கதாநாயகியாக களத்தில் இறக்கி இருப்பது பெரிய சர்ச்சையாக விமர்சனமாக தற்போது மாறியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விக்ரம் பிரபு.

- Advertisement -

இதுவரை பல படங்களில் விக்ரம் பிரபு நடித்திருந்தாலும் கும்கி சிறை இவன் வேற மாதிரி சிகரம் தொடு டாணாக்காரன் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு பெரிய வரவேற்பை தந்திருக்கின்றன. மற்றபடி இன்னும் முன்னிலை நடிகர் வரிசைக்கு வர நடிகர் விக்ரம் பிரபு தொடர்ந்து போராடி வருகிறார்.

திறமையான நடிப்பை வெளிப்படுத்தியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தும் நடிகர் விகரம் பிரபுவுக்கு பெரிய அளவில் சினிமாவில் இமேஜ் உயரவில்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு இன்ஸ்டா பிரபலத்தை அவருக்கு ஜோடியாக, அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பது தவறான செயல் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்