- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவர் ரொம்ப திறமையானவர், இவரை டைரக்டராக வெச்சு படம் எடுங்க - ஆர்பி செளத்ரியிடம் இயக்குனர்...

இவர் ரொம்ப திறமையானவர், இவரை டைரக்டராக வெச்சு படம் எடுங்க – ஆர்பி செளத்ரியிடம் இயக்குனர் விக்ரமன் சிபாரிசு செய்தது யாரை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். புதுவசந்தம் சூர்யவம்சம் வானத்தை போல உன்னை தேடி பூவே உனக்காக உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் விக்ரமன். அவரிடம் ஒரு படத்தில் மட்டுமே அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர் நட்சத்திர இயக்குனராக பின்னாளில் புகழ்பெற்றவர் கேஎஸ் ரவிக்குமார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, நான் டைரக்ட் செய்த புதுவசந்தம் என்ற ஒரு படத்தில் மட்டும்தான் கேஎஸ் ரவிக்குமார் என்னுடன் பணிசெய்தார். அந்த படத்தில் அவர் அசோசியேட் டைரக்டராக இருந்தார்.

- Advertisement -

அந்த படம் முடியும்போது நானே தயாரிப்பாளர் செளத்ரி சாரிடம் ரெகமென்ட் செய்தேன். சார் இவர் என்னுடைய நண்பர். இந்த படத்தில் அசோசியேட் டைரக்டராக ஒர்க் பண்ணியிருக்கார். நல்ல திறமையான கலைஞர். அப்போது ஒரு கன்னட படத்தை மலையாளத்தில் ஜோசியம் என்ற பெயரில் அவர் ரீமேக் செய்து எடுத்துக்கொண்டு இருந்தார்.

தமிழில் அந்த படத்தை ரீமேக் செய்ய டைரக்டர் தேடீட்டு இருந்தார். ஜோசியம் பட மலையாள டைரக்டரையே தமிழில் வைத்து படம் எடுக்கவும் இருந்தார். அப்போ நான் சௌத்ரி சார்கிட்ட சொன்னேன். தமிழில் படம் எடுக்கறீங்க? தமிழ் தெரிஞ்ச டைரக்டர் இருந்தால் தான் நல்லா இருக்கும். என்னோட அசோசியேட் டைரக்டர் ரவிகுமாரை வெச்சு எடுங்க.

- Advertisement -

நல்ல திறமைசாலி நல்ல டெக்னீஷியன் நிறைய டெக்னாலஜி நாலேட்ஜ் உள்ளவர். நிறைய படங்களில் பணி செய்திருக்கிறார். நல்ல பிரமாதமா படம் எடுப்பார். அவரை வெச்சு படம் எடுங்க என்று சொன்னேன். அதுவரைக்கும் கேஎஸ் ரவிக்குமாரை சௌத்ரி சார் நேர்ல பார்த்ததே கிடையாது.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அவர் வந்தது கிடையாது. கேஎஸ் ரவிக்குமாரை பார்த்ததும் கிடையாது. அவரை தெரியவே தெரியாது. அப்புறம் நான் ரவிக்குமார் கிட்ட சொல்லி அவர் போய் நேர்ல செளத்ரி சாரை பார்த்து பேசியிருக்கிறார். அப்புறம் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சேரன் பாண்டியன் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கினார் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்