- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்கு தகுதியானவர் எங்க அண்ணன் விஜய் மட்டும்தான், ...

விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்கு தகுதியானவர் எங்க அண்ணன் விஜய் மட்டும்தான், அவங்களே அதை உணர்ந்து ஒத்துக்கறாங்களே? – கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்றுவேலை என்று பேசியிருந்தார்.

இதில் அவர் தவெக தலைவர் முதல்வர் விஜய் என்ற எந்த இடத்திலும் குறிப்பிட்டு விஜய் சேதுபதி பேசவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஜனநாயகம் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடத்தப்படும் போட்டியில் அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக அவர் அப்படி பேசியிருந்தார். ஆனால் விஜய் சேதுபதி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் விஜய்க்கு தான் என்று தவெக வினர் விஜய் சேதுபதியை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, லீடர்ன்னா என்னன்னே தெரியாம என்று ஒரு பொதுவான கருத்தை விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் அந்த வாரம் தலைவராக பெரும்பான்மையான போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு எதிரணியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பதவியின் சுமை தாங்க முடியாமல் அதை ராஜினாமா செய்த ஷாதிகாவிடம் அப்படி சொல்கிறார் விஜய் சேதுபதி.

இதை உடனே பெருத்த அவமானமாக உணர்ந்து விஜய் சேதுபதியை பற்றி அசிங்க அசிங்கமாக (அந்த பக்தர்களின் வழக்கம்) திட்டி சமூக வலைதளங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கி விட்டார்கள் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் – தூய கட்சியின் தூய தூதுவர்கள்.

- Advertisement -

இதில் நமக்கெல்லாம் என்ன ஆறுதல் என்றால் இதைப்போன்ற பொதுவான கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தகுதியானவர் அவர்களின் அண்ணன் மட்டுமே என்று அவர்கள் உறுதியாக நம்புவது. இந்த உண்மை நம்மை விட விஜயின் ஆதரவாளர்களுக்கு நன்கு தெரிகிறது என்பது அவர்களே அதை உணர்ந்துவிட்டார்கள் என்பதின் வெளிபாடு தானே?

நல்ல மாற்றம் வரும். காத்திருப்போம். இடைத்தேர்தல் முடிவுகள் அதன் தொடக்கமாக இருக்கலாம் என்று அந்த பதிவில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். அதாவது விஜய் சேதுபதி சொன்ன தகுதியற்ற லீடர், பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுபவர் என்ற பொதுவான கருத்தை இப்போது தவெக வினர் தானாகவே முன்வந்து விஜய்தான் அது என்று ஏற்றுக்கொண்டிருப்பதை ஜேம்ஸ் வசந்தன் நக்கல் செய்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்