தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மிஷ்கின். ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். பிறகு சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கிய மிஷ்கின் நடிகராகவும் மாறினார்.
குறிப்பாக சவரக்கத்தி டிராகன் வணங்கான் லியோ நந்தலாலா மாவீரன் என பல படங்களின் மிஷ்கின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என்ற அடையாளங்களும் மிஷ்கினுக்கு உண்டு. புத்தகம் வாசிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரதம் பேசுதடி அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ முகமூடி யுத்தம் செய் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பிசாசு உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. இதில் துப்பறிவாளன் 2 படம் உருவான நேரத்தில் நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த படம் பிறகு உருவாகவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, நரேன் நடிப்பில் அஞ்சாதே 2 படத்தை டைரக்ட் செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு பிறகு இசை என்ற தலைப்பில் ஒரு கதை என்னிடம் உள்ளது. அதை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன். தற்போது என் மனதில் வளர்த்து வருகிறேன்.
நடிகர் மம்முட்டிகாகவும் ஒரு கதையை எழுத போகிறேன். என் மனதில் மொத்தம் 26 கதைகள் உள்ளன. பிசாசு 2 ட்ரெயின் படங்கள் ரிலீஸ் ஆக தாமதமானாலும் அடுத்தடுத்த கதைகளுடன் முன்னேறுவேன். மம்முட்டியுடன் ஒரு புதிய படம் லோகேஸ் கனகராஜ் கூட்டணியில் ஒரு படம் அஞ்சாதே 2 படங்களை உருவாக்குவேன்.
நடிகர் விஷால் விஷால் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு ஈகோவால் வந்தது. இன்னும் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் திரை உலகை விட்டு முற்றிலுமாக விலக உள்ளேன் என்று அந்த நேர்காணலின்போது இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





