- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சனின் அடுத்த படத்தில் இந்த டாப் நடிகர்தான் ஹீரோ, அந்த டாப் நடிகர்தான் தயாரிப்பாளர், எக்ஸ்பக்டேஷனை...

நெல்சனின் அடுத்த படத்தில் இந்த டாப் நடிகர்தான் ஹீரோ, அந்த டாப் நடிகர்தான் தயாரிப்பாளர், எக்ஸ்பக்டேஷனை எகிறவைக்கும் தகவல்

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்தபோது சமூக வலைத்தளங்களில் அவரை சுற்றி வளைத்து கேலி செய்தனர். எங்கு திரும்பினாலும் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருந்தது.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் “ஜெயிலர்” திரைப்படத்தில் பந்தயம் அடித்துவிட்டார் நெல்சன். உலகளவில் “ஜெயிலர்” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் ஆகி வருகிறது. இது கடந்த வருடம் வெளியான கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தை விட அதிகம்.

- Advertisement -

இந்த மாபெரும் வெற்றியை தொடந்து சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நெல்சன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் தலா ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் நெல்சன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது நெல்சன், தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம். தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தனது 50 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தனுஷ், நெல்சனுடன் இணைந்து பயணிக்க உள்ளாராம். அதே போல் இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்க உள்ளாராம்.

“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் மாஸ் ஆன நடிகர்களை வைத்து படம் தயாரிக்க தொடங்கிவிட்டார். கமல்ஹாசன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தையும் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில்தான் தனுஷை வைத்து படம் தயாரிக்கப்போவதாக தகவல் வருகிறது.

- Advertisement -

சற்று முன்