- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில உன்னை பேச சொன்னா, என்னை எதிர்த்து பேசிட்டியேப்பா - கமல்ஹாசனுக்கு போன் போட்டு கேட்ட...

கடைசியில உன்னை பேச சொன்னா, என்னை எதிர்த்து பேசிட்டியேப்பா – கமல்ஹாசனுக்கு போன் போட்டு கேட்ட கருணாநிதி

- Advertisement -

சென்னையில், கலைஞர் 100 என்ற நூல் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு, கலைஞர் 100 நுாலை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் நூலை பெற்றுக்கொண்டார். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது,

தசாவதாரம் படம் பண்ணீட்டு இருக்கும் போது, என்ன பண்ணீட்டு இருக்கறே, என்று கருணாநிதி என்னை கேட்டார். மேன்க்ரோஸ் ( சதுப்புக்காடுகள்) எல்லாம் அழிஞ்சுட்டு வருது, அதை எதிர்த்து போராடற மாதிரி பூவராகன் கேரக்டரை வெச்சிருக்கேன்னு சொன்னேன், புரியாதுப்பா, மக்களுக்கு புரியற மாதிரி இருக்கணும் என்று சொன்ன அவர், நீ மணல் கொள்ளையை பத்தி எடு, என்று சொன்னார்.

- Advertisement -

படத்தை பார்த்துவிட்டு, என் கன்னத்தை கிள்ளி, கொஞ்சினது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. என்ன மாதிரி படம் எடுத்திருக்கான் பாருய்யா, இங்கிலீஸ் படம் மாதிரி எடுத்து வெச்சிருக்கான் என, நான் இல்லாத பல இடங்களில் பலரிடம் அவர் என்னை பாராட்டிய செய்திகள் எனக்கு, செவிவழி செய்திகளாக வந்து சேர்ந்தன.

அவருடன் முரண்படக் கூடிய சுதந்திரத்தை என்னைப் போன்ற சின்ன பையன்களுக்கும் அவர் கொடுத்திருந்தார்.ஒரே ஒரு கிராமத்துல என்ற ஒரு படம். அந்த வருடம் எனக்கு ஏழெட்டு நேஷனல் அவார்டு, கவர்ன்மெண்டே இல்லை. அந்த படத்துக்காக ஒரு பெரிய விழா, பீச்ல எடுத்தோம். அதுல, சிறப்பு விருந்தினராக கருணாநிதி, நடிகர் திலகம் கலந்துகிட்டாங்க. அரசு எடுக்க வேண்டிய விழாவை நாம எல்லாம் சேர்ந்து எடுக்கலாம் என்று நான் சொன்னதால், அதை ஒத்துக்கிட்டு கருணாநிதி விழாவுக்கு வந்தார்.

- Advertisement -

ரிசர்வேஷன் என்கிற விஷயத்தை இந்த படம் எதிர்த்து பேசுது. பாலம் பழுதுபட்டதால், மாற்றுப்பாதை அமைச்சிருக்கோம், அந்த மாற்றுப்பாதை வேண்டாமுன்னு படத்துல வருது. அதை பார்த்துட்டு, இது முரண்பட்ட கருத்தா இருக்குன்னு கருணாநிதி கையால பரிசு கொடுக்க மறுத்துட்டார்.

அப்புறம் கடைசியில மேடையில பேசுன நான், பாலம் பழுதுன்னா, எல்லாரும் சேர்ந்து சரி செய்யலாம். பாலத்துக்கு அடியில நாங்க இருக்கோம். நீங்க தலைவரா இருக்கறீங்க. பாலம் இருக்கணும். ஆனா, அந்த மாற்றுப்பாதையே நிரந்தரமா இருந்துடக் கூடாதுன்னு சொன்னேன்.

அப்புறம் எனக்கு கருணாநிதி போன் பண்ணி, என்னப்பா, கடைசியில உன்னை பேச சொன்னா, என்னை எதிர்த்து பேசற மாதிரி சொல்லிட்டீயேன்னு கேட்டார், அய்யய்யோ அப்படி இல்லீங்கய்யா என்றேன், அதை மாத்தி சொல்ல சொன்னார். அது எப்படிங்க ஐயா, நான் நிஜத்தை தானே சொன்னேன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் அது பத்தி, அவர் எதுவுமே பேசலை. அது, ஒரு தலைவருக்கான பெருந்தன்மையா அவருகிட்ட பார்த்தேன், என பல விஷயங்களை இவ்விழாவில் பகிர்ந்துகொண்டார் கமல்ஹாசன்.

- Advertisement -

சற்று முன்