- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி, விஜய்க்கு அடுத்ததாக அஜீத்குமாரும் இப்படி இறங்கி அடிக்கிறாரே - இந்த சுமை எல்லாம் கடைசியில...

ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக அஜீத்குமாரும் இப்படி இறங்கி அடிக்கிறாரே – இந்த சுமை எல்லாம் கடைசியில யார் தலையில் விழப் போகுதுன்னு தெரியலையே

- Advertisement -

அரசியல்வாதிகளை காட்டிலும், இப்போது சினிமா நடிகராகி விட்டால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவின் பொருளாதார நிலை மாறி இருக்கிறது. ஐந்து கோடி ரூபாய் செலவழித்து படம் எடுத்தாலே, அது பெரியதாக நினைக்கப்பட்ட காலத்தில், இன்று 300 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க தாராளமாக தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர்.

அரசியலில், ஒருவர் கவுன்சிலராகி விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் சும்மா இருந்தே காலத்தை கழிக்கலாம். ஒருமுறை எம்எல்ஏ ஆகிவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கவே தேவையில்லை. அவரே அமைச்சர் ஆகி விட்டால், அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்த்து விடுவார் என்று கூறப்படுகிறது. அந்தளவுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு பண மழை கொட்டுகிறது.

- Advertisement -

அந்த வகையில், அரசியலை காட்டிலும் தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் முகத்தை பரிச்சயப்படுத்தி விட்டால் போதும். அடுத்து சில ஆண்டுகளில், சில படங்களில் ஹீரோவாகி கோடிகளில் சம்பளத்தை தொட்டுவிடலாம் என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் நடிக்கும் படத்தின் தரமோ, அந்த படத்தில் வரும் காட்சிகள், கதை குறித்த எந்த அக்கறையும் அந்த ஹீரோக்களுக்கு இருப்பதில்லை.

ரஜினிகாந்த், ஜெயிலர் படத்துக்கு ரூ.110 கோடி சம்பளம் பெற்றார். இப்போது நடித்து வரும் ரஜினி 170 படத்துக்கு ரூ. 90 கோடி சம்பளம் பெறுகிறார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 165 கோடி ரூபாய் என்ற நிலையில், மற்ற நடிகர்களுக்கு அதாவது அமிதாப், ராணா, பகத் பாசில் ஆகியோரின் சம்பளம் 45 கோடி ரூபாய் போக, படத்தின் தயாரிப்பு செலவு மொத்தமே ரூ. 30 கோடி மட்டுமே. அதற்குள் தான் அத்தனை செலவுகளையும் சமாளித்தாக வேண்டும்.

- Advertisement -

அதே போல், இப்போது விஜய் நடிக்கும் விஜய் 68 என்ற படத்தில், விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய். ஆனால், லியோ படத்தில் விஜய் சம்பளம் ரூ. 125 கோடிதான். அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே, 75 கோடி ரூபாயை, தன் சம்பளத்தில் உயர்த்தி இருக்கிறார் விஜய். இப்படி விஜய் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியதால், படத்தின் ஒளிப்பதிவாளர் உட்பட படக்குழுவின் சம்பளம், படத்தின் தயாரிப்பு செலவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய் வழியில் தனக்கு கணிசமான சம்பளம் கிடைத்தால் போதும். படத்தை எப்படி தயாரித்தால் என்ன, வெறும் அட்டை பெட்டிகளை அடுக்கி ஷெட் போட்டு எடுத்தால் என்ற மனநிலைக்கு நடிகர் அஜீத்குமாரும் வந்துவிட்டார். அஜீத் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் மொத்த பட்ஜெட் 225 கோடி ரூபாய். இதில் அஜீத் சம்பளம் 160 கோடி ரூபாய். மீதி 65 கோடியில் தான், மற்ற நடிகர், நடிகையர் சம்பளம், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் சம்பளம், படக்குழுவினருக்காக அனைத்து செலவுகள், பயணம், உணவு செலவுகள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.

தமிழ் சினிமாவை, இப்படி ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை மட்டுமே சம்பாதிக்க ஆசைப்படும் ரஜினி, விஜய், அஜீத் போன்ற நடிகர்களுக்காக தான், ரசிகர்கள் தங்களது உழைப்பில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தியேட்டர்களில் கொட்டிக் கொடுக்கின்றனர் என்ற கசப்பான உண்மை, அந்த நடிகர்களுக்கு நிச்சயமாக தெரியும். ரசிகர்களுக்கு அது எப்போது தெரியப் போகிறது என்பதுதான் இதில் மிக கசப்பான கேள்வி.

- Advertisement -

சற்று முன்