- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நகைச்சுவை நடிகர் சூரி... அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப் போகிறார்...

முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நகைச்சுவை நடிகர் சூரி… அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து பின்னர் நகைச்சுவை நடிகராக மாறி இப்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் அவர் நடித்து வந்தார். தீபாவளி, வின்னர் உள்ளிட்ட திரைப்படங்களில் தலை காட்டிய சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது வெண்ணிலா கபடி குழு திரைப்படம்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படத்தில், போட்டி போட்டு புரோட்டா சாப்பிடும் காட்சியை சூரி நடித்திருந்தார். மக்களிடம் எளிதாக இந்த காட்சி கனெக்ட் ஆக, சூரியின் முகம் தமிழ் திரை உலகத்திற்கு பரீட்சையமானது. அங்கிருந்து தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி அவர், முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்தார்.

- Advertisement -

குறிப்பாக சூரி – சிவகார்த்திகேயன் காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்பட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் இருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, மோஸ்ட் வான்டெட் நகைச்சுவை நடிகர் பட்டியலில் இணைந்தார் சூரி. அதேசமயம் அவரின் காமெடி எடுபடவில்லை என்றும், ஆங்கிலத்தை தவறாக கூறியே காமெடி செய்வதால் மட்டும் நகைச்சுவை நடிகராக ஆகிவிட முடியாது எனவும் சிலர் விமர்சித்து வந்தனர்.

இப்படியான சூழலில்தான், சூரியை கதாநாயகனாக வைத்து அழகு பார்த்தார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வந்த சூரி, அந்த திரைப்படம் முழுவதிலும் குமரேசன் ஆகவே வாழ்ந்தார். ஒவ்வொரு காட்சியிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்தார் சூரி.

- Advertisement -

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் டூப் போடாமல் பல்டி அடித்த காட்சிகள் காண்போரின் புருவத்தை உயர்த்த செய்தன. இதை தொடர்ந்து அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் கதை எழுதும் திரைப்படத்தில் சூரி நடிக்க வருகிறார். இதனை எதிர்நீச்சல் திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் எடுக்கிறார்.

சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தின் நடிக்க சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவரிடம் இயக்குனர் ராஜூ முருகன் ஒரு கதையைக் கூறி இருக்கிறாராம். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை எடுத்த ராஜூ முருகன், கார்த்தியை வைத்து ஜப்பான் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தில் சூரியை நடிக்க வைக்க முயற்சித்து வரும் நிலையில், அதன் அடுத்த கட்ட நகர்வு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்