- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி படம் எடுத்தால், இப்படிதான் நோஸ்கட் கிடைக்கும், லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் செய்த...

அப்படி படம் எடுத்தால், இப்படிதான் நோஸ்கட் கிடைக்கும், லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் செய்த தரமான சம்பவம் – விஜய் ப்ரோ வேற லெவல்

- Advertisement -

நேற்று மாலை, சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜய், திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தின் கோ ரைட்டர் ரத்னக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் பல விஷயங்களுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். ரஜினி ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் என்றும், நான் தளபதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன் என்றும் கூறிவிட்டார். கழுகை விட, யானைதான் முக்கியம். சினிமாவை விட, அரசியல்தான் மிகப்பெரிய வெற்றி என்பதையும் தெரிவித்து விட்டார்.

மேலும், இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகரான அர்ஜூன், ஒருநாள் முதல்வரிடம் கேள்வி கேட்பது போல், விஜயிடம் அர்ஜூன் கேள்வி கேட்டது,. விஜய் முதல்வர் ஆகும் விருப்பத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது. விஜய் அரசியலுக்கு வருவார் என, அர்ஜூனும் விழாவில் பேசி விட்டார்.

இந்த படத்தை பொருத்த வரை பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டாலும், விமர்சன ரீதியாக விஜயை பலரும் கிண்டலடிக்கவும், விமர்சித்து பேசவும் காரணமாக இருந்தது சில விஷயங்கள். அதுவும் அவர் பேசிய அந்த கெட்ட வார்த்தை, டிரெய்லரில் வந்தது மிகப்பெரிய சர்ச்சையாகிப் போனது.

இந்நிலையில் நேற்றைய விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் விஜயிடம் ஒரு கேள்வியை எழுப்பினர். அப்போது உங்களது அமைச்சரவையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு அமைச்சர் என்றால், என்ன பதவி கொடுப்பீர்கள் என்று கேட்டனர். இது கற்பனை தானே என்று சிரித்தபடி கூறிய விஜய் கூறிய பதில்தான் மிக முக்கியமானது.

அதாவது, லோகேஷ்க்கு போதை ஒழிப்பு தடுப்பு இலாகா என்ற புதிய பிரிவை உருவாக்கி, அவரை அமைச்சர் ஆக்குவேன் என்றார். ஏனென்றால், டிரக் ப்ரீ சொசைட்டி என, அதாவது போதை அற்ற சமுதாயம் உருவாக்குவது என்ற பெயரில் தான், அவர் போதை சார்ந்த விஷயங்களையே படமாக எடுத்து வருகிறார். அதனால், அவருக்கு அந்த பதவிதான் சரி, என்று செம நோஸ்கட் கொடுத்துவிட்டார் விஜய் என்கின்றனர் அவரது ரசிகர்கள். கெட்ட வார்த்தை பேச வெச்சதுக்கு சரியான பதிலடி, தளபதி கொடுத்துவிட்டார் எனவும் பலர், கிண்டலடித்து வருகின்றனர்.

சற்று முன்