- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரியார், அறிஞர் அண்ணாவுடன் டிடிஎஃப் வாசனை ஒப்பிட்டு பேசிய மஞ்சள் வீரன் இயக்குனர்... என்ன கொடுமை...

பெரியார், அறிஞர் அண்ணாவுடன் டிடிஎஃப் வாசனை ஒப்பிட்டு பேசிய மஞ்சள் வீரன் இயக்குனர்… என்ன கொடுமை சார் இது…

- Advertisement -

இன்றைய நவீன யுகத்தில் பலரும் செல்போனிலேயே மூழ்கி கிடக்க, அதில் சமூக வலைதளத்தின் மூலம் குறுகிய காலங்களிலேயே ஏராளமானோர் பிரபலமாகி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கோவையைச் சேர்ந்த இளைஞர் டிடிஎஃப் வாசனை கூறலாம்.

தான் பைக்கில் செல்லும் ஒவ்வொரு இடங்களையும் யூடியூபில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் பார்வையாளர்களை ஈர்த்த அந்த இளைஞர் சமூக வலைதளத்தின் மூலம் நல்ல வருவாயை பெற்று வந்தார். 2கே கிட்ஸ்களின் பிரபலமாக மாறிய டிடிஎஃப் வாசன், பரவலாக பேசப்பட்டது கொரோனா சமயத்தில் தான்.

- Advertisement -

வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி பிறந்த நாளை பெரும் கூட்டத்தை சேர்த்துக் கொண்டாடினார் டி டி எப் வாசன். கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற, ஏராளமான இளைஞர்கள் கூடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், வாசன் பலராலும் கவனிக்கப்பட்டார்.

தனக்கு கிடைத்த பேரும் புகழையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அந்த இளைஞர், எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வீடியோக்களை இணையத்தில் பதிவை ஆரம்பித்தார். குறிப்பாக அதிவேகத்தில் செல்லும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பேசி பொருளாகியது. அது மட்டும் அல்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தினார். அதேசமயம் தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்தி மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை திரு வி க பூங்கா எனும் படத்தை இயக்கியவர் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் சர்ச்சைக்கு பெயர் போன வாசன், கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்யும் போது தவறி விழுந்து கையை உடைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரல் நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருசக்கர வாகன உரிமத்தை ரத்து செய்தது.

தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், வாசன் மற்றும் மஞ்சள் வீரன் இயக்குனர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இப்போது பேசிய மஞ்சள் வீரன் இயக்குனர், பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி டிடிஎஃப் வாசன் சாலையில் விழுந்தார். அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அவர் விழுந்திருக்கிறார். பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே விழுந்த ஒருவன் மாபெரும் தலைவனாக இந்த தமிழ் மண்ணிலே வருவான் வெல்வான் அன்புத் தம்பி டிடிஎஃப் வாசன் என்று கூறி அதிர்ச்சியூட்டினார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்