- Advertisement -
Homeபொழுதுபோக்குஜப்பான் பட டைரக்டர் வரிசையில் அடுத்து அயலான் டைரக்டர், 2 வருஷமா சூர்யாவுக்காக காத்திருந்த அவருக்கு...

ஜப்பான் பட டைரக்டர் வரிசையில் அடுத்து அயலான் டைரக்டர், 2 வருஷமா சூர்யாவுக்காக காத்திருந்த அவருக்கு கிடைத்த பதில் இதுவா? – அவரு ஒண்ணும் ஆட்டோ டிரைவர் இல்லீங்க

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரண்டு வாரம் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுதோல்வி அடைந்த நிலையில், வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இடையில், 96 பட இயக்குநர் பிரேம் இயக்கும் படத்தில் நடித்தும் வருகிறார்.

- Advertisement -

இந்த படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து எடுக்கும் ரஜினி 171 படத்துக்கு பிறகு, கைதி 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யா, கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்ஆர் பிரபுதான் தயாரிக்க உள்ளார். சூர்யா, கார்த்தி படங்கள் தொடர்ந்து கமிட் ஆகி இருப்பதால் பிஸியாக உள்ளனர்,

இதற்கிடையே அயலான் படத்துக்கு முன்பே, திருப்பூரைச் சேர்ந்த இயக்குநர் ரவிக்குமாருக்கு, ரூ. 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த சூர்யா, இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறியிருக்கிறார். அவரிடம் கதையும் சொல்லப்பட்டதாக தெரிகிறது. அயலான் படத்துக்கு பிறகு, சூர்யா படத்தை இயக்கும் திட்டத்தில் ரவிக்குமார் ஆர்வமாக இருந்தார்.

- Advertisement -

கடந்த மாதத்தில், வரும் ஜூன் மாதத்தில் நம் படப்பிடிப்பை துவங்கி விடலாம் என சூர்யா தரப்பில் இருந்து உறுதிமொழி கிடைத்த நிலையில், ரவிக்குமார் உற்சாமாக இருந்தார். அயலான் படத்துக்கு பிறகு வேறு படங்கள் இயக்க, கைவசம் படம் இல்லாத நிலையில், சூர்யாவுக்காக ரவிக்குமார் காத்திருந்தார்.

இந்நிலையில் படத்தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, ரவிக்குமாரை தொடர்பு கொண்டு கைதி 2 படத்துக்கு பிறகுதான், உங்கள் படத்தை எடுக்க முடியும். அதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும் என சூர்யா கூறிவிட்டார். கைதி 2, உங்கள் படம் என இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார். மேலும் அதுவரை நீங்கள் வேண்டுமானால், அயலான் 2 படத்தை திட்டமிட்டு எடுங்கள் என அவர்கள் தரப்பில் ஒரு ஐடியாவும் ரவிக்குமாருக்கு தரப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்