- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்சார் போர்டு தரப்பில் கொண்டு வரப்பட்ட அதிரடி நிபந்தனை, திக்குமுக்காடி போன இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் -...

சென்சார் போர்டு தரப்பில் கொண்டு வரப்பட்ட அதிரடி நிபந்தனை, திக்குமுக்காடி போன இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் – தணிக்கை வாரியம் மறு பரிசீலனை செய்யுமா?

- Advertisement -

குதிரைக்கு கடிவாளம் இருப்பதை போல சினிமாவுக்கு சென்சார் போர்டு கடிவாளமாக இருக்கிறது. என்னதான் தணிக்கை குழு தரப்பில் நிபந்தனைகளை விதித்தாலும் யு/ஏ அல்லது ஏ சான்றிதழ் வழங்கினாலும் தமிழ் சினிமாவில் வன்முறைக்கும் ஆபாச படங்களுக்கும் குறைவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான டிசி படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். படம் முழுவதும் லாரி லாரியாக தண்ணீரை கொட்டுவது போல திரையில் இரத்தத்தை கொட்டி படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு திரைப்படம் திரைக்கு வராமல் போயிருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை இயக்குனர்தான் விளக்க வேண்டும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்சார் போர்டு ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
பொதுவாக திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டால் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்று கண்காணிக்கவும் தணிக்கை குழுவுக்கு உரிமை உண்டு.

அதுகுறித்த புகார் எதுவும் வந்தால் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறும் உரிமையும் சென்சாருக்கு உண்டு. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் உரிய காரணத்துடன் விண்ணப்பித்து திரைப்படத்தில் மாற்றம் செய்யலாம் என்று தணிக்கையின் 33ம் விதி அனுமதி அளித்தது.

- Advertisement -

ஆனால் இந்த விதி தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு முறை திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கி விட்டால் பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் ஒரு திரைப்படம் தணிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டால் அதன் பிறகு அந்த படத்தில் எந்த மாற்றத்தையும் தயாரிப்பாளர்கள் செய்ய முடியாது.

இந்த அதிரடி அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பல படங்களின் கிளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்காமல் போனால் அதை மாற்றி வேறு கிளைமாக்ஸ் இணைத்து 33 ம் விதியை பயன்படுத்தி மாற்றியுள்ளனர். சில முக்கியமான நடிகர் நடிகைகளின் காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டால் இந்த விதியை பயன்படுத்தி அதை நீக்கிய நிகழ்வுகளும் உண்டு. இனி இதற்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை சினிமாத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்