தமிழ் திரையுலகில் மாபெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசனும் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். 1970களில் ஆரம்பித்த இவர்களது பயணம் 50 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரை தங்கள் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை தங்கள் திரைப்படங்களின் மூலம் இவர்கள் இருவரும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.
இன்று எக்ஸ் வலைத்தளத்தில் விஜய் அஜித், சிம்பு தனுஷ் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது போல 20 25 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளிலேயே மல்லு கட்டி கொண்டார்கள் ரஜினி கமல் ரசிகர்கள். அதுவும் அதுவும் இருவர் திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால், நடக்கும் அலப்பறையே வேறு என்று கூறலாம். அந்த அளவுக்கு இருவரும் ரசிகர்களும் துடியாய் நிற்பார்கள்.
வெளியே தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று இந்த இரண்டு நடிகர்கள் கூறிக் கொண்டாலும், அவர்களின் திரை படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு சிறு உரசல் ஏற்படத்தான் செய்யும். இருப்பினும் சமீப காலங்களில் இருவரும் மிகவும் நட்பு பாராட்டி பேசிக் கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. நிகழ்ச்சிகளில் மேடைகளில் தோன்றும் இவர்கள், ஒருவருக்கொருவர் அன்புடன் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ஜெய் பீம் ஞானவேல் திரைப்படத்தின் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட, மற்றொரு அரங்கில் கமலும் வேலை செய்து கொண்டிருந்தார். இதை எடுத்து இருவரும் சந்திக்க, அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. பாத்து எவ்வளவு நாளாச்சு என ரஜினி அன்போடு கமலை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இப்படியான சூழல்தான் மீண்டும் ரஜினி கமல் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆளவந்தான். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், அன்றைய தேதியில் பெரிதாக ஓடவில்லை. இருப்பினும் இரட்டைக் குழந்தைகள் அதில் ஒருவர் சைக்கோ என்ன வித்தியாசமான கதைகளை அமைத்து நம்மை புருவம் உயர்த்த செய்திருப்பார் கமல்ஹாசன். தற்போது இந்த திரைப்படத்தில் சில தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதே தேதியில் ரஜினிகாந்தின் முத்து திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இன்றளவும் முத்து திரைப்படத்தை பார்ப்பதற்காக தனி ரசிகர்கள் உண்டு. இப்படியான சூழலில்தான் இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





