விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றார். அதேவேளையில் என்னதான் அசீம் டைட்டிலை வெற்றி பெற்று இருந்தாலும் விக்ரமன் தான் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தார். அதோடு இந்த டைட்டில் வின்னர் பட்டம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது.

இந்த மாதமே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 சில காரணங்களினால் தாமதமாகி அடுத்த மாதம் ஆரம்பத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 7-க்கான ப்ரோமோ சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் அடுத்த மாதம் ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியானது துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது அரசல் புரசலாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சில பிரபலங்களின் பெயர்களும் இந்த லிஸ்டில் அடிபட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், பிரபல நடிகர் பிரிதிவிராஜ், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா, நடன இயக்குனர் ஸ்ரீதர் போன்றோர் இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களில் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் பிக்பாஸ் வாய்ப்பு குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் அந்த பேட்டியில் அப்பாஸ் பேசுகையில் : சில வருடங்களுக்கு முன் கமலஹாசன் நேரடியாக எனக்கு போன் பண்ணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தார். நான் தான் வர முடியாது என்று கூறி அந்த வாய்ப்பிற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன் என அப்பாஸ் கூறியுள்ளார்.
தமிழ் படங்களில் நடித்து பெரிய அளவில் புகழ்பெற்ற அப்பாஸ் பல்வேறு படங்களில் பல பிரபலமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாகவே சினிமாவிலிருந்து விலகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாததன் காரணமாக வெளிநாட்டில் செட்டிலான அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கவுள்ள வேளையில் அவர் அளித்த இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.





