- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களை சந்தோஷமாக வைத்திருப்பதே அந்த ரெண்டும்தான்… நான் சினிமாவில் நீடித்திருக்கவும் அதுதான் காரணம் - நடிகர்...

மக்களை சந்தோஷமாக வைத்திருப்பதே அந்த ரெண்டும்தான்… நான் சினிமாவில் நீடித்திருக்கவும் அதுதான் காரணம் – நடிகர் அஜீத்குமார் ஓபன்டாக்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உள்ளார். ஆனால் அவர் நடிப்பை காட்டிலும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மோட்டார் பைக், கார்ரேஸ் ரைபிள் சுடுதல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் நடிகர் அஜீத்குமார், துபாய் பெல்ஜியம் இத்தாலி பிரிட்டன் ஸ்பெயின் என பல நாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்று வருகிறார். மேலும் அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் இருக்கிறார்.

அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடக்கும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளேன். விளையாட்டு மற்றும் இந்திய திரைப்படத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒத்த எண்ணம் கொண்டவர்களை நான் கண்டுபிடிக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல வழிகள் உள்ளன. அதற்கு மோட்டார் விளையாட்டுகளை ஒரு தளமாக பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்படுகின்றன மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரிய அளவில் சர்வதேச பார்வையாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.

உதாரணமாக இன்று இந்தியாவில் கொரியா படங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அதேபோல் இந்திய படங்களும் அதே மாதிரியான வரவேற்பை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பிரபலமாக உள்ளன என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் போஜ்புரி போன்ற மற்ற அனைத்து மொழி படங்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

எனது ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் பந்தயத்தை பார்க்க முயற்சி செய்கிறார்கள். பொழுதுபோக்கும் விளையாட்டும் எப்போதும் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. கோவித் 19 காலத்தில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். மக்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு தான்.

எனவே திரைப்படத் துறையில் ஒரு பகுதியாக நான் இருப்பதை மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். கடந்த 33 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் நான் பணியாற்றி வருவதால் இதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. இற்கு காரணம் அன்பும் நல்ல எண்ணமும் என்று நடிகர் அஜீத்குமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்