- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயக கடமையை மறக்காத ஏகே - வௌிநாட்டில் இருந்து பறந்து வந்த நடிகர் அஜீத்குமார், நாளைய...

ஜனநாயக கடமையை மறக்காத ஏகே – வௌிநாட்டில் இருந்து பறந்து வந்த நடிகர் அஜீத்குமார், நாளைய தேர்தலில் விஜய்க்கு ஆதரவு தருவாரா?

- Advertisement -

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக கூட்டணி திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் களத்தில் நிற்கிறது. நடிகர் விஜய்க்கு அபரிமிதமான வரவேற்பும் செல்வாக்கும் மக்கள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில் அரசியல் களத்தில் சூடு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,38,925 பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,89,60,838 ஆக உள்ளது. அடுத்து மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் உள்ளனர். காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 1.40 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

- Advertisement -

இந்த தேர்தலுக்கு பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சில தினங்களாக செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் விமானங்களில் பயணித்து பலரும் தமிழ்நாட்டு வந்துக்கொண்டு இருக்கின்றனர். அதனால் இந்த முறை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் 78 சதவீதம் மட்டுமே அதிக ஓட்டுப்பதிவு சதவீதமாக உள்ளது. இந்த முறை எப்படியும் 90 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பல நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் நடிகர் அஜீத்குமார், பெல்ஜியம் நாட்டில் இருந்து இன்று மதியம் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜனநாயக கடமை ஆற்ற நாளை ஓட்டுப்பதிவு செய்ய அஜீத்குமார் வந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

நடிகர் அஜீத்குமாரின் சினிமா போட்டியாளராக பார்க்கப்பட்டவர் நடிகர் விஜய். இப்போது அரசியல் களத்தில் முதல்வர் வேட்பாளராக இருக்கிறார். அவருக்கு நடிகர் அஜீத்குமார் ஆதரவு தெரிவித்தால் அவரது ரசிகர்களும் தவெக கட்சிக்கு தங்களது ஆதரவை காட்டுவார்கள். குறிப்பாக நாளை அஜீத்குமார் வெள்ளை சட்டை சந்தன கலர் பேண்ட் என்கிற டிரஸ் கோடில் வந்தால் போதும். அஜீத்குமார் ரசிகர்களும் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து விசிலடிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் ஏகே அப்படி சூசகமாக தன் ஆதரவை விஜய்க்கு தருவாரா என்பது நாளை காலையில் அவர் ஓட்டு சாவடிக்கு வரும்போதுதான் தெரியும்.

- Advertisement -

சற்று முன்