அஜீத்குமார் டாப் ஸ்டார் நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவரது அடுத்த படம் ஏகே 64 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்ய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் கடந்த ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் வரை பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடக்கிறது. இதுவரை 6 மாதங்கள் நடந்த பல கார் ரேஸ்களில் அஜீத்குமார் கலந்துக்கொண்டு சில போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதுவரை 4 விபத்துகளையும் அஜீத்குமார் சந்தித்து விட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இன்னும் 4 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் தொடர்ந்து நடக்கின்றன. அக்டோபருக்கு பிறகு சென்னைக்கு திரும்பும் நடிகர் அஜீத்குமார் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
ஏகே 64 படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ. 275 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் அஜீத்குமார் சம்பளம் மட்டுமே ரூ. 180 கோடி என்றும் முதலில் தகவல் வெளியானது. ஆனால் அஜீத்குமாரின் பெரிய சம்பளம், மத்த செலவுகள், அஜீத்குமாரின் கடந்த கால படங்களின் வசூல் ஆகியவற்றை கணக்குப் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஏகே 64 படத்தை தயாரிக்கவில்லை என விலகிவிட்டார்.
பிறகு சன் பிக்சர்ஸ் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் ஏசியன் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் என முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் அஜீத்குமார் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எந்த நிறுவனமும் ஓகே சொல்லாமல் ஏகே 64 படத்தை நிராகரித்து விட்டன. இதற்கு அஜீத்குமார் போட்ட பல நிபந்தனைகளில் இந்த கண்டிஷன்தான் இதற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, தயாரிப்பாளர் நடிகர் அஜீத்குமாருக்கு பேசிய சம்பளத்தில் பெரும்பகுதியை முதலிலேயே அட்வான்ஸ் ஆக தந்துவிட வேண்டும். மீதி தொகையை படப்பிடிப்பு முடிவதற்குள் வங்கி கணக்கில் செலுத்த முன்தேதியிட்ட செக்குகளை தர வேண்டும். அதுவும் துபாயில் உள்ள அவரது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில் இருந்து துபாய் வங்கி கணக்கை தயாரிப்பாளர் செலுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள், பிரச்னைகள் உள்ளதால்தான் ஏகே 64 படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அலட்சியப்படுத்தி உள்ளன.





