- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித்தலைவருக்கு ஆதரவாக அதிமுக பிரசாரத்துக்கு சென்ற நடிகர் கே பாக்யராஜ் - உடனே திரும்பி போகச்...

புரட்சித்தலைவருக்கு ஆதரவாக அதிமுக பிரசாரத்துக்கு சென்ற நடிகர் கே பாக்யராஜ் – உடனே திரும்பி போகச் சொன்ன எம்ஜிஆர், என்ன நடந்தது?

- Advertisement -

கடந்த 1980களில் முன்னணி நடிகராக இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் கே பாக்யராஜ். அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தார். அதனால் எம்ஜிஆர் தனது கலைவாரிசு என்று கே பாக்யராஜை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தனது படங்களில் எம்ஜிஆர் புகைப்படங்களை தவறாமல் வைத்து எம்ஜிஆரின் மீதான தனது அன்பை கே பாக்யராஜ் வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது.

அவ்வப்போது எம்ஜிஆருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நடிகர் கே பாக்யராஜ் கலந்துக்கொள்வது வழக்கம். இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் அருப்புக்கோட்டை சென்றேன். ஆனால் பாதி வழியில் செல்லும்போது என் மனைவி பூர்ணிமா பிரசவத்திற்காக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறார் என்று எனக்கு தகவல் வந்தது.

- Advertisement -

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் தான் உள்ளது. அதனால் பாதிதூரம் சென்று விட்டதால், நான் திரும்பி போனாலும் அங்கே குழந்தை பிறந்துவிடும் என்பதால் பிரச்சாரத்திற்கு செல்ல முடிவு செய்து விட்டேன். எனது மாமியாரை கையெழுத்து போடச் சொல்லி ஆபரேஷனும் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. அதன் பிறகு எம்ஜிஆரை நேரில் சந்தித்து ஸ்வீட் கொடுத்தேன்.

மத்தவங்க எல்லாம், என்ன தலைவருக்கு சுகர் இருக்கு, எதற்கு ஸ்வீட் என்று கேட்டனர். எம்ஜிஆர் என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டார். வரும்போது தான் போன் வந்தது. எனக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று கூறினேன். இதைக் கேட்ட எம்ஜிஆர் முகமாறி விட்டார். நீங்க அங்க போகலையா? என்று கேட்டார். தேர்தலுக்கு 2 நாள் தானே இருக்கிறது. அதனால் இங்கு வந்தேன் என்று சொன்னேன். இல்ல விமானம் இருக்கு, அதுல போயிட்டு நாளைக்கு வாங்க, அப்பறமா பிரச்சாரம் வச்சுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பரவாயில்லை, நன்றாக தான் இருக்கிறாங்க. போன் வந்திருச்சு என்று கே பாக்யராஜ் சொல்ல, தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் எனக்கு போன் வரும். பூர்ணிமா பேசுறாங்க என்று. நான் கவலைபடக்கூடாது என்பதற்காக ஹாஸ்பிடலில் ஒரு ஆள் வைத்து எம்ஜிஆர் இந்த வேலையை செய்துள்ளார் என்று கே பாக்யராஜ் நெகிழ்ச்சியாக, அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

மேலும் ஒருமுறை உடல்நலம் பாதித்த நிலையில் எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது அவரது கட்சியின் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் நடிகை ஜெயலலிதா உள்ளிட்ட யாருமே தன்னை சந்திக்க எம்ஜிஆர் அனுமதிக்கவில்லை. ஆனால் நடிகர் கே பாக்யராஜை மட்டும் அமெரிக்கா மருத்துவமனைக்கு நேரில் வந்து தன்னை பார்க்க எம்ஜிஆர் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்