- Advertisement -
Homeபொழுதுபோக்குகள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற உலகநாயகன், விபத்து நடக்குதுன்னு வாகன போக்குவரத்தை நிறுத்த முடியுமா என்கிறாரே? -...

கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற உலகநாயகன், விபத்து நடக்குதுன்னு வாகன போக்குவரத்தை நிறுத்த முடியுமா என்கிறாரே? – திமுகவுக்கு ஆதரவாக கம்பி கட்டிய கமல்ஹாசன்

- Advertisement -

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை செய்யப்பட்டு, அது விஷ சாராயமாக மாறி 55 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சிலரது உடல்நிலையில் மட்டுமே சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய், இந்த சம்பவம் நடந்த மறுநாளே, கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதற்கிடையே தமிழக அரசு, விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் அந்த குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக தரப்படுகிறது. ஆனால், வறுமையில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்டால், எந்த உதவியும் இல்லை. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவன் உயிரிழந்தால், எந்த நிவாரணமும் தரப்படுவதில்லை என்றும், கஷ்டப்பட்டு உழைத்த குடிக்காத மக்களின் வரிப்பணத்தை எடுத்து விஷச்சாராயம் குடித்தவன் குடும்பத்துக்கு அரசு தருவது எப்படி சரியாகும் என்று, சீமான் போன்றவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், ஆளுங்கட்சி திமுகவுக்கு ஆதரவாக சில கருத்துகளை சொல்லியிருப்பது, சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வள்ளுவர் எழுதிய குறளில் கள்ளுண்ணாமை இருக்கிறது என்றால், அப்போது முதலே இது இருக்கிறது என்றுதான் அர்த்தம். சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக வாகன போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தை வெகுவாக குறைக்கவும் முடியாது.

மதுபானம் பெரிய ஆலைகளில் தயார் செய்கிறார்கள். அதற்காக கடைகளும் வைத்திருக்கின்றனர். மருந்து கடைகளை விட, டாஸ்மாக் கடைகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே குடிக்காதே என்று ஒரு அறிவுரை சொல்வதை விட மிதமாக குடியுங்கள், உங்கள் உயிர்தான் முக்கியம் என்று அறிவுரை செய்யும் இடங்கள் டாஸ்மாக் பக்கத்திலேயே இருக்க வேண்டும். உடனே டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது தவறான கருத்து என்று கமல் கூறியிருக்கிறார், திமுகவுக்கு ஆதரவு தரும் கருத்துகளை அவர் சொல்லி இருப்பது வைரலாகி வருகிறது.

சற்று முன்