- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மீது தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு... நடுங்கிப் போன தென்னிந்திய திரை உலகம்... என்னங்க இப்படி...

நடிகர் மீது தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு… நடுங்கிப் போன தென்னிந்திய திரை உலகம்… என்னங்க இப்படி சொல்லிட்டாங்க…

- Advertisement -

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார் தமன்னா. ரவி கிருஷ்ணா நடித்த கேடி திரைப்படத்தின் மூலம் தான் அவர் கோலிவுட்க்கு அறிமுகமானார். இதில் கல்லூரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக அமைந்தது. அங்கிருந்து தனது வெற்றி பயணத்தை தொடங்கினார் தமன்னா.

இப்படி இருக்கையில் மூத்த நடிகர் உடன் இணையும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தமன்னா நடித்த திரைப்படங்களும் வெற்றி மேல் வெற்றி குவித்து வந்தன. இதில் முக்கியமாக கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த பையா, சூர்யாவுடன் அவர் இணைந்த அயன் ஆகிய திரைப்படங்களை கூறலாம். இரண்டுமே பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டன.

- Advertisement -

இதேபோல் அஜித்துடன் இணைந்த வீரம் திரைப்படமும் தமன்னாவுக்கு ஹிட் கொடுத்தது. விஜய்யுடன் இணைந்து அவர் சுறா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அது மோசமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தமன்னாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் அவருக்கு, எந்த திரைப்படங்களுமே அமையவில்லை. இந்த சமயத்தில்தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் தமன்னா. வா நூ காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அது மட்டுமல்ல, தமன்னாவின் உற்சாகமூட்டும் நடனமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

- Advertisement -

இடையே நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்தார் தமன்னா. இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால் திடீரென விஜய் வர்மா தமன்னா இருவரும் பிரிந்தனர். அதற்கான காரணம் என்னவென்று இதுவரை சொல்லப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தற்போது இந்தி திரைப்படங்களில் மட்டும் வாய்ப்பு இருப்பதால் அங்கு மட்டுமே நடித்து வருகிறார் தமன்னா.

இந்த நிலையில் அவர் தென்னிந்திய நடிகர் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதில், ஆரம்பத்தில் தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடித்த போது, அந்த நடிகரின் செயல் எனக்கு தொந்தரவாகவும் சங்கடத்தையும் கொடுத்தது. இதனால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். அதற்குப் பின்னரே அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த நடிகர் என்று தமன்னா தெரிவிக்கவில்லை. மொத்தமாக தென்னிந்திய திரைப்படம் என்று அவர் கூறியிருப்பதால், தமிழ் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடிகராக தான் இருக்க முடியும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்