- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜ் மனைவி; கடவுள் மறுப்பாளர் என தன்னை விமர்சிப்பவர்களுக்கு...

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜ் மனைவி; கடவுள் மறுப்பாளர் என தன்னை விமர்சிப்பவர்களுக்கு சத்யராஜ் தந்த அதிரடியான பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக நடித்தவர் சத்யராஜ். இப்போது குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் சத்யராஜ்.

இப்போது நடிகர் சத்யராஜ், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கடந்த 1986ம் ஆண்டில் வெளியான மிஸ்டர் பாரத் படத்துக்கு, 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் சத்யராஜ் கூலி படத்தில் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினிக்கு நண்பராக சத்யராஜ் நடிக்கிறார்.

- Advertisement -

நடிகர் சத்யராஜூக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். சிபிராஜூம் சினிமாவில் நடித்து வருகிறார் ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர், வெற்றிவேல் சக்திவேல், லீ, சத்யா, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் சத்யராஜ் அளவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை சிபிராஜ் பெறவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட ஒரு பதிவில், தனது அம்மா மகேஸ்வரி 4 ஆண்டுகளுக்கு மேலாக கோமாவில் இருப்பதாகவும், சத்யராஜ் சிங்கிள் பேரண்ட் ஆக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து சத்யராஜ் கடவுள் மறுப்பாளராக இருப்பதால்தான் அவரது மனைவி இப்படி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக 4 ஆண்டுகளாக இருக்கிறார் என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

- Advertisement -

தற்போது நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சத்யராஜிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதுபற்றி நடிகர் சத்யராஜ் கூறுகையில், வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் கலந்ததுதான். சாமி கும்பிட்டவர்கள் யாரும் இறந்தது இல்லையா, சாமி கும்பிடுவதற்கும் இதற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போனது இல்லையா, காய்ச்சல் தலைவலி வந்தது இல்லையா, அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும்போது வேன் கவிழ்ந்து விபத்து ஏற்படவில்லையா, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு புரட்சியான விஷயத்தை செய்யும்போது இப்படி எதிர் கருத்துகளும், விமர்சனங்களும் வரும். இதெல்லாம் நான் கண்டுகொள்வது இல்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார். துவக்கத்தில் ஆன்மிக நாட்டம் உள்ளவராக இருந்த சத்யராஜ், பிறகு இயக்குனர் மணிவண்ணனுடன் நெருங்கி பழகி நட்பு கொண்ட நிலையில், கடவுள் மறுப்பாளராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்