- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஷாருக்கானுக்கு அப்படி ஒரு பாதிப்பு இருக்கிறதா? - பிரபல இயக்குனர் சொன்ன தகவலால் அப்செட்...

நடிகர் ஷாருக்கானுக்கு அப்படி ஒரு பாதிப்பு இருக்கிறதா? – பிரபல இயக்குனர் சொன்ன தகவலால் அப்செட் ஆன பாலிவுட் ரசிகர்கள்!

- Advertisement -

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். தமிழில் இவர் 2 படங்களில் நடித்திருக்கிறார். அதில் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படம் பெரிய வரவேற்பை ஷாருக்கானுக்கு பெற்றுத் தந்தது. இதில் மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். அடுத்து கமலுடன் ஹேராம் படத்திலும் முக்கிய கேரக்டரில் ஷாருக்கான் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் சமீபத்திய படங்களில் ஷாருக்கான் நடித்த பதான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படமும் ரூ. 1150 கோடி என்கிற அளவுக்கு பெரிய வசூலை அடைந்த வெற்றிப் படமாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் விசித்திரமான பழக்கம் குறித்து அவரது நெருங்கிய நண்பர் மற்றும் பிரபல திரைப்ப இயக்குனர் கரண் ஜோஹர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து கரண் ஜோஹர் கூறியதாவது, ஷாருக்கானுக்கு ஜீன்ஸ் பேண்ட்களின் பிட்டிங் குறித்த அதீத ஈடுபாடு உள்ளது. இந்த பாதிப்பை மருத்துவ துறையில் அப்செசிவ் கம்பல்சீவ் டிஸ் ஆர்டர் OCD என்று சொல்கிறார்கள்.

ஷாருக்கானுக்கு யாராக இருந்தாலும் அவர்களின் ஜீன்ஸ் பிட்டிங்கை வைத்துதான் அவர்களை பற்றி எடை போடுவார். ஒருவேளை நீங்கள் பிட்டிங் இல்லாத ஜீன்ஸ் அல்லது அசிங்கமாக தோற்றமளிக்கும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தால் அவர் உங்களை ஒரு மோசமான நபராக கருதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி ஒரு மனநிலை அவருக்கு இருக்கிறது.

- Advertisement -

நான் ஷாருக்கானை பார்க்க செல்லும் போதெல்லாம் ஷாருக்கான் முதலில் என் ஜீன்ஸை ஒரு கூர்மையான பார்வை பார்ப்பார். அந்த பார்வையிலேயே என் ஜீன்ஸ் சரியில்லை என்று அவர் சொல்வது போல இருக்கும். அப்போது நான் அவரிடம் எதையாவது சொல்லி சமாளிக்க முயற்சி செய்வேன்.

இல்லை ஷாருக். நான் ஜீன்ஸ் பேண்ட் அணியவில்லை என்று அவருக்கு சமாதானம் சொல்ல வேண்டியது இருக்கும். இந்த ஜீன்ஸை எங்கிருந்து வாங்கினாய் என்று கோபமாக கேட்பார். அவரது கண் பார்வையே எனக்கு பீதியை ஏற்படுத்தி விடும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கரண் ஜோஹர் கூறியிருக்கிறார். இது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்