- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அடுத்த கட்டத்துக்கு செல்வது அவர்களது கையில்தான் உள்ளது - கொம்ப சீவி படத்தில் நடித்தது...

நான் அடுத்த கட்டத்துக்கு செல்வது அவர்களது கையில்தான் உள்ளது – கொம்ப சீவி படத்தில் நடித்தது குறித்து ஓபனாக பேசிய நடிகர் சண்முகபாண்டியன்!

- Advertisement -

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்பு சீவி படம் நேற்று வெளியானது. இதற்கு முன்பே அவர் மதுரை வீரன் சகாப்தம் படை தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இது சண்முக பாண்டியன் நடித்துள்ள 4வது படம். இயக்குனர் பொன்ராம் டைரக்ட் செய்திருக்கிறார். சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தார்னிகா நாயகியாக அறிமுகாகி உள்ளார்.

இந்த படம் குறித்து நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, இந்த படத்தில் பாண்டி என்ற மீன்பிடி தொழில் செய்யும் இளைஞனாக நடித்திருக்கிறேன். கடந்த 1996ம் ஆண்டில் உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக டைரக்ட் பொன்ராம் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

எனக்கு மீன்பிடிக்க தெரியாது. அதனால் கற்றுக் கொண்டேன். வைகை அணையில் கடல் போல் காட்சியளித்த நீரில் பரிசல் ஓட்டியது சவாலாக இருந்தது. 12 ஊர்களுக்கு தலைவராக சரத்குமார் வருகிறார். எது சாப்பிடணும் சாப்பிடக்கூடாது, என்ன மாதிரி டயட் எடுக்கணும், எப்ப தூங்கணும் உடற்பயிற்சி செய்யணும் என்கிற நிறைய டிப்ஸ் ஷூட்டிங் நேரத்தில் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு பெரும்பாலும் ஆக்சன் கதை தான் கிடைக்கிறது. ரொமான்டிக் காமெடி கதைகளையும் கேட்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. ஆனால் நான் நடிக்கும் படத்தில் தவறாக எதுவும் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த படத்தில் எனது தோற்றத்தை பார்த்து, உங்களை பார்க்க விஜயகாந்த் போலவே உள்ளது என்கிறார்கள்.

- Advertisement -

எனக்கு ஏற்ற கதைகள் இன்னும் சரியாக வரவில்லை என்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் டைம் ரொம்ப முக்கியம். மதுரை வீரன் சோசியல் மெசேஜ் சொன்ன படம். ஆனால் ரிலீஸ் ஆன டைம் சரியில்லை. படை தலைவன் விலங்குக்கும் மனிதனுக்குமான உணர்வுகளை சொன்ன படம். கதையாக சொல்லும்போது நல்லா சொல்றாங்க. படமாக வரும் போது அது சரியாக வரலே.

இதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நான் நன்றாக நடிக்கிறேன். ரசிகர்கள் என்னை ஆதரித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் இன்னும் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அது எனக்கு தரும். முடிந்தவரை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் பண்ணனும் என்று தான் ஆசைப்படுகிறேன் என்று நடிகர் சண்முகபாண்டியன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்