தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்கள் 4 பேரில் ஒருவராக இருக்கிறார் நடிகர் அஜீத்குமார். இதில் ரஜினிகாந்த் 74 வயதிலும், பில்டப் ஹீரோவாக மாஸ் ஆக நடித்து வருகிறார். கமல்ஹாசன் இன்னும் வித்யாசமான கதைகளில் நடிக்க அதிக மெனக்கெடுகிறார். விஜய் விரைவில் சினிமா ஆட்டத்தில் இருந்து, அரசியல் ஆட்டத்துக்கு மாற தயாராகி வருகிறார்.
அந்த வரிசையில் நடிகர் அஜீத்குமாரும் சினிமாவில் தீவிர ஆர்வம் காட்டாமல் கார் பந்தயம் பைக் பந்தயம் துப்பாக்கி சுடுதல் விமானம் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளில் தீவிர ஆர்வமாக இருந்து வருகிறார். விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களுக்கு பிறகு அவர், 2026ம் ஆண்டில் தான் ஷூட்டிங்கில் பங்கேற்க போகிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் வரை கார் பந்தயம்தான் அவரது முழு கவனமாக இருக்கப் போகிறது.
இதற்கிடையே அடுத்த விஜய் இவர்தான் என்ற அடையாளத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தி கோட் படத்தில், விஜய் கையால் துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயனுக்கு உண்மையிலேயே அதிர்ஷடக் காற்று அவர் பக்கமாக பலமாக வீசுகிறது.
அதனால்தான், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்க அமரன் படம் சக்கைப் போடு போட்டு, உலகளவில் ரூ. 325 கோடி வசூலை அனாயசமாக கடந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் தமிழ்நாடு தியேட்டர்களில் ஷேர் மட்டுமே ரூ. 75 கோடியை கடந்திருக்கிறது.
அதனால் தனது சம்பளத்தை ரூ. 75 கோடியாக உயர்த்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து ஏஆர் முருகதாஸ், சுதா கொங்கரா படங்களில் நடிக்கிறார். அந்த படங்களும் மெகா ஹிட் படங்களாக சிவகார்த்திகேயனுக்கு அமையும் பட்சத்தில் இன்னும் ஓராண்டுக்குள் அவரது சம்பளம் ரூ. 100 கோடியை சுலபமாக கடந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரத்தில் இதுவரை அஜீத்குமார் நடித்த படங்கள் எதுவும் தமிழ்நாடு தியேட்டர்களில் ஷேர் என ரூ. 60 கோடியை கடந்தது இல்லை. இப்போது அந்த விஷயத்தில் அமரன் படம் 75 கோடி ஷேர் கடந்து, அஜீத்குமாரை சிவகார்த்திகேயன் முந்தியிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. தவிர, அடுத்தடுத்த வெயிட் ஆன படங்கள் இன்னும் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல அதிக வாய்ப்புகளும் உள்ளது.





