கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகத ராஜா படம் வெளியானது. அப்போது படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷாலின் பலவீனமான தோற்றமும் நடுக்கமும் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர். மைக்கை பிடித்த அவரது கைகள் வயதான முதியவர் போல நடுங்கியது இணையத்தில் வைரலானது.
ஆனால் வைரல் பீவர் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிகழ்ச்சியிலேயே ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போதே சிலர், விஷாலுக்கு மதுபழக்கம் குடிப்பழக்கம் இருப்பதால்தான் அப்படி கைகள் நடுங்குகின்றன என்று கடுமையாக விமர்சித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நடந்த மிஸ் திருநங்கை 2025 அழகிப்போட்டி நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி மேடையில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கும் அவரது மதுப்பழக்கமே காரணம் என பலரும் விமர்சிக்க அதுவும் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து நடிகர் விஷால் கூறியதாவது, மதுபானம் சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் நான் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைபிடிப்பதை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன்.
நான் பார்ட்டிக்கே போவது கிடையாது. நான் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.
இது என்னை பாதிக்கவும் செய்யாது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று நடிகர் விஷால் கூறி இருக்கிறார். இதன்மூலம் எல்லா கெட்ட பழக்கங்களும் தனது ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான் என அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். அந்த உடல் நல பாதிப்புகளின் காரணமாக தான் இப்போது அவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





