- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷா இடத்தில் நான் இருந்தால் அப்படி தான் நடந்துக்கொள்வேன் - விஜய் திரிஷா விவகாரத்தில் ஓபன்...

திரிஷா இடத்தில் நான் இருந்தால் அப்படி தான் நடந்துக்கொள்வேன் – விஜய் திரிஷா விவகாரத்தில் ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகை அம்பிகா!

- Advertisement -

பொதுவாழ்க்கைக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமாக இருக்கிறார்களா? அவர்களின் தனிமனித ஒழுக்கம் எப்படி இருக்கிறது என்பது மக்களின் பார்வையாக இருக்கிறது. அதுவும் அரசியல் களத்துக்கு வருபவர்கள் மீதான கண்ணோட்டமும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்தில் சிக்குகிறது.

அந்த வகையில் தமிழக முதல்வராக உள்ள விஜய் உடன் நடிகை திரிஷா நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். ஏற்கனவே விஜயுடன் பல படங்களில் நடித்த அவரால் விஜயின் குடும்பம் அவரை விட்டு பிரிந்துள்ளது. விஜயின் மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷா ஆகியோர் விஜயை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

விஜய் – திரிஷா நெருக்கம்தான் தங்களது பிரிவுக்கு காரணம் என்று நடிகை சங்கீதா ஏற்கனவே விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்த போது கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகும் விஜய் திரிஷா ஒன்றாக திருமண வரவேற்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டனர். அப்போது விஜய் தவெக கட்சி தலைவராக மட்டும்தான் இருந்தார்.

ஆனால் இப்போது தமிழகத்தின் முதல்வராக விஜய் உள்ள நிலையிலும் திரிஷா – விஜய் நட்பும் நெருக்கமும் பழைய நிலையிலேயே நெருக்கமாக தொடர்கிறது. வெளிநாட்டில் முதலீடு தொழில் ஈர்ப்புக்காக லண்டன் சென்ற முதல்வர் விஜயுடன் நடிகை திரிஷாவும் காணப்பட்டார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் அரசாங்க பணத்தில் விஜய் லண்டன் சுற்றுலாவா என்ற கடும் விமர்சனம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரபல சீனியர் நடிகை அம்பிகா கூறியதாவது, நடிகை திரிஷா அவருடைய நண்பருடன் வெளியே செல்கிறார். ஒருவேளை இருவருக்கும் நட்பு இருக்கிறது. எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதை நாங்கள் வெளியே காட்டுவோம் என்று இருவரும் நினைக்கலாம். ஆனால் விஜய் இப்போது ஒரு பதவியில் இருக்கிறார்.

அவருக்கு நம்முடைய உறவால் ஒரு அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது என்றால் நான் திரிஷா இடத்தில் இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் தர்ம சங்கடமாக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். அவரை விட்டு ஒதுங்கிக் கொள்வேன் என்று நடிகை அம்பிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்