தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். குறிப்பாக அனுஷ்கா ஷெட்டி நடித்த வேட்டைக்காரன் தெய்வ திருமகள் பில்லா இரண்டாம் உலகம் இஞ்சி இடுப்பழகி சிங்கம் சிங்கம் 2 ருத்ரமா தேவி லிங்கா பாகுபலி பாகுபலி 2 பஞ்சமுகி அருந்ததி என அவரது படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
குறிப்பாக அருந்ததி ருத்ரமாதேவி பாகுபலி போன்ற படங்கள் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன. அதிலும் பிரபாஸூக்கு ஜோடியாக இளவரசி தேவசேனை கேரக்டரில் அனுஷ்காவின் கம்பிரமான நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது படத்தின் கேரக்டருக்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்து குண்டான தோற்றத்தில் நடித்த நிலையில், மீண்டும் அவரது உடல் எடை குறையவில்லை. இதனால் பல ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். இப்போது பழைய அனுஷ்காவாக அவர் அதே பழைய தோற்றத்தில் நடித்த படம் காதி விரைவில் திரைக்கு வர உள்ளது.
அதற்கு முன்பாக காதி படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என ஐந்து மொழிகளில் காதி படம் வெளியாக உள்ளது. இயக்குனர் கிரீஸ் ஜாகர்லமுடி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் காதி படம், நடிகை அனுஷ்காவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதி படத்தின் டிரெய்லர் காட்சிகளில் நடிகை அனுஷ்கா பழைய அழகுடன் அதே கம்பீரமான தோற்றத்தில் காணப்படுகிறார். ஆக்சன் காட்சிகளில் ரத்தம் தெறிக்க ஆவேசம் காட்டி நடித்திருக்கிறார். விக்ரம் பிரபுவும் அனுஷ்காவும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருப்பதால் இருவரும் காதலர்களாக அல்லது கணவன் மனைவியாக நடித்திருக்க வாய்ப்புள்ளது. சண்டை காட்சிகளில் அதிரடி பறப்பதால் இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெரும் ஒரு வெற்றிப் படமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.





